உள்ளடக்கத்துக்குச் செல்

உமெரா அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உமெராஅகமது (Umera Ahmad( உருது: عمیرہ احمد‎ ) (பிறப்பு 10 டிசம்பர் 1976) ஒரு பாகிஸ்தான் எழுத்தாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார் . மேரி ஜாத் ஜாரா-இ-பெனிஷன் என்ற நாடக தொடருக்கான லக்ஸ் ஸ்டைல் விருதில் சிறந்த எழுத்தாளர் விருது உட்பட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

உமேரா அகமது டிசம்பர் 10, 1976 அன்று பாகிஸ்தானின் குஜ்ரான்வாலாவில் பிறந்தார். சியால்கோட்டிலுள்ள முர்ரே கல்லூரியில் இவர் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே கல்லூரியில் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் திறமையான அறிஞர்கள் மற்றும் கவிஞர்களில் ஒருவரான அல்லாமா முஹம்மது இக்பால் கல்வி பயின்றார். .

உமேரா அகமது மிகச் சிறிய வயதிலிருந்து கல்லூரியில் படிக்கும் வரை தனது எழுத்துப் பணியினைத் தொடர்ந்தார். தனது கையெழுத்து சிறப்பாக இருந்ததனால் தான் முதல் புதினம் எழுதியதாக இவர் கூறினார்.அந்த முதல் புதினமான ஜிந்தகி குல்சார் ஹை 1998 ஆம் ஆண்டில் கவாடீன் என்ற பெண்கள் மாதாந்திர இதழில் வெளியிடப்பட்டது. வாசகர்கள் மத்தியில் இந்த புதினம் பரவலாக புகழ் பெற்றது. இதில் உள்ள பெண் நாயகி கஷாஃப், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் வரக்கூடிய கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர்த்துப் போராடும் ஒரு திறமையான மற்றும் கடின உழைப்பாளி மாணவராக சித்தரிக்கப்படுகிறார். அவரது தாயாருக்கு குழந்தைப் பேறு இல்லாத போது அவரது தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பின்னர் தனது முதல் மனைவியையும் மூன்று மகள்களையும் அவர்களின் விருப்பத்திற்கு விட்டுவிட்டார்.இந்தக் கதையின் மூலமாக இவர் தொலை நோக்குப் பார்வையுள்ள எழுத்தாளராக அறியப்பட்டார்.

இவர் முழு நேர எழுத்துப் பணியினைத் துவங்குவதற்கு முன்பாக இவர் சியால்கோட்டின் கேம்பிரிட்ஜ் பிரிவான ரானுவப் பொதுப் பள்ளியில் இவர் கற்பித்தல் பனியினை மேற்கொண்டார். மேலும் இவர் பாகிஸ்தானில் மிக முக்கியமான மாதாந்திர இதழ்களான கவடீன் மற்றும் ஷுவாவுக்காக தொடர்ந்து எழுதினார். மேரி ஜாத் ஸர்ரா-இ-பீ-நிஷான், இமான் உமீத் அவுர் மொஹாபத், அமர் பெயில், ஹாசில், மற்றும் லா ஹாசில் போன்ற அவரது கதைகள் சக எழுத்தாளர்களிடம் இருந்து இவர் தனித்து தெரியக் காரணமாக அமைந்தது. சமுதாயத்தில் பெண்களின் பங்கைப் பற்றிய அவரது சித்தரிப்புகள் குறித்த படைப்புகள் ஆரம்பத்தில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.

வரிவடிவம்

[தொகு]

உமேரா அகமது பல ஆண்டுகளாக வரிவடிவ ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். அவர் பாகிஸ்தானில் உள்ள அனைத்து முக்கிய தொலைக்காட்சி வரிசைகள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுடன் பணியாற்றியுள்ளார். அவரது வழிகாட்டுதலின் கீழ் எழுதப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் விருதுகளை வெல்வதற்கும், விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெறுவதற்கும், வணிக ரீதியான வெற்றிகளைப் பெற்றுள்ளன.

தரார்

[தொகு]

உமேரா அகமதுவின் வழிகாட்டுதலிலும் மேற்பார்வையிலும் கைசெரா ஹயாத் எழுதிய ஒரு தொடரர் தாரார் ஆகும். இது 2014 இல் ஆரி டிஜிட்டலில் ஒளிபரப்பப்பட்டது.

டைஜஸ்ட் எழுத்தாளர்

[தொகு]

டைஜஸ்ட் ரைட்டர் என்பது உமேரா அகமதுவின் வழிகாட்டுதலிலும் மேற்பார்வையிலும் மடீஹா ஷாஹித் எழுதிய ஒரு தொடர். இது ஹம் தொலைக்காட்சியில் 2014 இல் ஒளிபரப்பப்பட்டது. இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

குறிப்புகள்

[தொகு]
  1. "Lux Style Awards Winners". Daily Times. 2011-09-20. Archived from the original on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமெரா_அகமது&oldid=2867985" இலிருந்து மீள்விக்கப்பட்டது