உள்ளடக்கத்துக்குச் செல்

உமான் சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உமான் சண்டை
இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையின் பகுதி
Map of the battle
ஜூன் 22-செப் 1, 1944 காலகட்டத்தில் ஜெர்மானிய படை முன்னேற்ற வரைபடம்
நாள் 15 ஜூலை – 8 ஆகஸ்ட் 1941
இடம் உமான், மேற்கு உக்ரெய்ன்
அச்சு நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஜெர்மனி
 உருமேனியா
 அங்கேரி
 சோவியத் ஒன்றியம்
தளபதிகள், தலைவர்கள்
நாட்சி ஜெர்மனி கெர்ட் வோன் ரன்ஸ்டெட் சோவியத் ஒன்றியம் செம்யோன் புத்யோன்னி
பலம்
400,000 வீரர்கள்
600 டாங்குகள்
300,000
இழப்புகள்
தெரியவில்லை மொத்தம்: 203,000
போர்க்கைதிகள்: 103,000
மாண்டவர் / காயமடைந்தவர்: 100,000
317 டாங்குகளும் 858 பீரங்கிகளும் கைப்பற்றப்பட்டன

உமான் சண்டை (Battle of Uman) என்பது இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் சோவியத் படைகளுக்கும் எதிராக நாசி ஜெர்மனியின் படைகளுக்கும் இடையே நடந்த ஒரு படைமோதல். பர்பரோசா நடவடிக்கையின் பகுதியான இதில் ஜெர்மானியப் படைகள் வெற்றி பெற்றன.

ஜூன் 22, 1941 அன்று சோவியத் தலைமை எதிர்பாராத வண்ணம், நாசி ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தது. மூன்று ஆர்மி குரூப்புகளாக ஜெர்மானியப் படைகள் சோவியத் ஒன்றியத்துக்குள் முன்னேறின. இவற்றுள் தெற்கு ஆர்மி குரூப்பு ஃபீல்டு மார்சல் ரன்ஸ்டெட் தலைமையில் உக்ரைன் பகுதிகளைத் தாக்கியது. ஜூலை மாதம் நடுப்பகுதியில் கீவ் நகர் வரை ஜெர்மானியப் படைகள் முன்னேறிவிட்டன. கீவ் நகர் அருகே அவற்றை எதிர்த்து சோவியத் தென்மேற்குக் களம் படைப்பிரிவு ஒரு எதிர்த்தாக்குதல் நடத்தியது. இதனை ஜெர்மானியப் படைகள் எளிதில் முறியடித்துவிட்டன. கீவ் நகரைச் சுற்றி ஜெர்மானியப் படை வளையம் மெல்ல இறுகத் தொடங்க்யது. சோவியத் தென்மேற்குக் களத்தின் உட்பிரிவுகளான 6வது மற்றும் 12வது ஆர்மிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் ஜெர்மானியக் கிடுக்கிப்பிடியில் சிக்கிக்கொண்டனர். உமான் நகருக்கு வடக்கிலிருந்து ஜெர்மானிய 1வது பான்சர்குரூப் படைப்பிரிவும் தெற்கிலிருந்து 17வது ஆர்மியும் கிடுக்கியில் இரு கரங்களாக சோவியத் படைகளை சுற்று வளைத்தன. ஆகஸ்ட் 2ஆம் தேதி படைவளையம் இறுகி சோவியத் படைகள் முற்றிலுமாக சுற்றி வளைக்கப்பட்டுவிட்டன. ஆகஸ்ட் 8ஆம் தேதி உமான் வளையத்தில் சிக்கிக் கொண்ட சோவியத் படைகள் சரணடைந்தன. ஏறத்தாழ 103,000 சோவியத் படைவீரர்கள் போர்க்கைதிகளாயினர்.


குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  • Léderrey, Ernest, (Col.), Germany's Defeat in the East: The Soviet Armies at War, 1941–1945, The War Office, London, 1955
  • Steinberg, Julien, Verdict of Three Decades: From the Literature of Individual Revolt Against Soviet Communism: 1917-1950, Ayer Publishing, 1971
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமான்_சண்டை&oldid=1368406" இலிருந்து மீள்விக்கப்பட்டது