உள்ளடக்கத்துக்குச் செல்

உடுப்பி மட்டு குல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடுப்பி மட்டு குல்லா

உடுப்பி மட்டு குல்லா (Udupi mattu gulla) அல்லது உடுப்பி மட்டி குல்லா என்பது பச்சை நிற கத்திரிக்காய் ஆகும். இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் உடுப்பியில் உள்ள மட்டி கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. இந்த கத்திரிக்காய்க்கு 2011ஆம் ஆண்டு புவியியல் சார்ந்த குறியீடு வழங்கப்பட்டது.

விளக்கம்

[தொகு]

இந்தப் பகுதியில் மட்டு குல்லா சுமார் 400 ஆண்டுகளுக்கு மேலாக வளர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனுடைய தோற்றமானது உடுப்பி, சோட் வதிராஜா மாதாவின் ஸ்ரீ வாதிராஜ தீர்த்தத்துடன் இணைக்கும் புராணக்கதையுடன் தொடர்புப் படுத்தப்படுகிறது.[1][2] இந்த கத்தரிக்காய் உதயவர் நதிக்கும் சுவர்ணா நதிக்கும் இடைப்பட்ட 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பயிரிடப்பட்டது.[3] மட்டி கிராமத்தினைத் தவிர அருகிலுள்ள கிராமங்களிலும் (பங்களா, கொப்ளா, கைபுஞ்சால்) விளைவிக்கப்படுகிறது.[2] இப்பகுதியில் இப்பயிருக்கு மீன் உரம் இடப்படுகிறது.[3]

மற்ற இடங்களில் வளர்க்கப்படும் ஊதா கத்திரிக்காயைப் போலல்லாமல், மட்டு குல்லா பச்சை நிறத்தில் உள்ளது. "குல்லா" என்ற சொல் குறிப்பிடுவது போல, இது கோள வடிவத்தில் உள்ளது.[3] இது பருவகால காய்கறியாகும். இப்பகுதியில் மட்டு குல்லா செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பருவமழைக்குப் பிறகு வளர்க்கப்படுகிறது.[2][4] குறைந்த ஈரப்பதத்தைக் கொண்டுள்ளது இக்கத்திரிக்காய் தனித்துவமான சுவையுடையது[5] மட்டு குல்லா பரவலாக உடுப்பி சமையலில் பயன்படுத்தப்படும் காய்கறியாக உள்ளது. குறிப்பாக உடுப்பி சாம்பாரில் பயன்படுத்தப்படுகிறது.[3][6] மட்டு குல்லாவின் அசாதாரண மற்றும் தனித்துவமான சுவை மற்றும் உற்பத்திக்காக பிரத்தியேக இருப்பிடத்திற்காக புவியியல் சார்ந்த குறியீட்டினை 2011ஆம் ஆண்டு பெற்றது.[4]

பூச்சித் தாக்குதல்கள் மற்றும் பி. டி. கத்திரிக்காயின் வருகை போன்ற பல்வேறு காரணங்களால் சமீபத்திய ஆண்டுகளில் மட்டு குல்லாவின் உற்பத்தி குறைந்தது.[1] தோட்டக்கலைத் துறையின் தகவலின் படி 2015ஆம் ஆண்டில் 67 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டது. தோராயமாக ஹெக்டேர் ஒன்றிற்கு 40 டன் மகசூல் கிடைத்தது.[1]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Pinto, Stanley. "Udupi paryaya will get enough mattu gulla, say growers". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
  2. 2.0 2.1 2.2 Prabhu, Ganesh. "Udupi's Mattu Gulla set to go international". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
  3. 3.0 3.1 3.2 3.3 "Udupi's famed brinjal losing race to hybrid variety". DNA India. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
  4. 4.0 4.1 Vinayak, AJ. "With a GI tag in the bag, Udupi farmers cash in on rare green brinjal". The Hindu Business Line. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
  5. Prabhu, Ganesh. "Udupi's brinjal to go places". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
  6. Hebbar, Nandini. "Go Matti Gulla!". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடுப்பி_மட்டு_குல்லா&oldid=3325662" இலிருந்து மீள்விக்கப்பட்டது