உள்ளடக்கத்துக்குச் செல்

ஈதகு

ஆள்கூறுகள்: 31°50′03″N 49°52′02″E / 31.83417°N 49.86722°E / 31.83417; 49.86722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுக்
ايذه
குல்-இ பாஃரா
குல்-இ பாஃரா
இசுக் is located in ஈரான்
இசுக்
இசுக்
ஆள்கூறுகள்: 31°50′03″N 49°52′02″E / 31.83417°N 49.86722°E / 31.83417; 49.86722
நாடு ஈரான்
மாகாணம்கூசித்தான்
மண்டலம்இசுக் மண்டலம்
பாக்ச்சுநடுவ மாவட்டடம், இசுக் மண்டலம்
மக்கள்தொகை
 • நகர்ப்புறம்
1,19,399 [1]
நேர வலயம்ஒசநே 3:30 (IRST)
 • கோடை (பசேநே)ஒசநே 4:30 (IRDT)
இணையதளம்http://www.izehpress.com

இசுக் (Izeh, பாரசீக மொழி: ايذه‎, பிற பெயர்கள் : Īz̄eh; Malāmir, Izaj, Malemir) என்ற இந்த நகரம், ஈரானின் கூசத்தான் மாகாணத்தின் இசுக் மண்டலத்தின் தலைநகரம் ஆகும்.2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அதன் மக்கள் தொகை 40,127 குடும்பங்களில் 253,695 ஆக இருந்தது. 1958 ஆம் ஆண்டு, இந்த நகராட்சி தோற்றுவிக்கப்பட்டது.

வசந்த காலத்திலும், கோடைகாலத்திலும் மிதமான வானிலை உள்ளது. குளிர்காலத்தில் பொதுவாக கூசத்தான் மாகாணத்திலேயே அதிக குளிரான நகரமாகும். கூசத்தான் பகுதியின் வடக்கு பகுதியான இசேவில் பழங்குடியினரான பக்தியாரிமக்கள் வசிக்கின்றனர். இந்நகரில் தொழில்துறைகளை விட விவசாயம் அதிகம் செய்யப்படுகிறது. முதன்மையான பயிர் அரிசி ஆகும். உள்நாட்டில் பெரெஞ்ச் என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் சூசன், சேவண்ட், மைடாவூட், சிட்டான்பே, சூசன், ஷேவண்ட், மைதாவூட், ஹிட்டான்பே ஆகிய பகுதிகளில் அதிகம் விளைவிக்கப் படுகிறது.

இசே நகரில் இருக்கும் தாதுப்பாறைகளினால், தாதுக்களின் சுரங்கங்கள் தோன்றியுள்ளன. அதன் அணை மற்றும் அமைந்துள்ளன. இங்குள்ள பண்டைய நினைவுச்சின்னங்களும், கற்சிங்கம் கல்லறைத் தோட்டமும், இன்னும் பல கட்டிடங்களும் வரலாற்றுப் புகழ் வாய்ந்தனவாகத் திகழ்கின்றன.

வரலாறு

[தொகு]

எலாமைட் காலத்தில் இது அயபீர் என்றும், பின்னர் சில சமயங்களில் அயதேம் என்றும் அழைக்கப்பட்டது. அரேபியர்கள் இந்த ஊரை இடாஜ் என்று அழைத்தனர் . லோர் அட்டபகன் தி கிரேட்ஸின் உள்ளூர் வம்சம் (Atabakan-e-Lor-e-Bozorg) இதை மாலேமிர் அல்லது மல்மீர் ("ராஜாவின் வீடு" அல்லது "தலைநகரம்") என்று மறுபெயரிட்டது. இந்த பெயர் 1935 ஆம் ஆண்டு வரை இருந்தது. அதன்பிறகு, அரசாங்கத்தின் ஒப்புதலுடன் இசக் என்ற பெயரானது, மீண்டும் பயன்படுத்தப்பட்டது.

காலநிலை

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், Izeh
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 13.7
(56.7)
15.3
(59.5)
19.9
(67.8)
26.9
(80.4)
32.8
(91)
39.2
(102.6)
42.2
(108)
42.0
(107.6)
40.0
(104)
33.4
(92.1)
24.4
(75.9)
17.1
(62.8)
28.91
(84.04)
தாழ் சராசரி °C (°F) 2.2
(36)
3.4
(38.1)
7.2
(45)
13.2
(55.8)
16.9
(62.4)
20.8
(69.4)
24.3
(75.7)
23.6
(74.5)
20.8
(69.4)
16.0
(60.8)
10.8
(51.4)
5.3
(41.5)
13.71
(56.68)
பொழிவு mm (inches) 80
(3.15)
66
(2.6)
63
(2.48)
37
(1.46)
10
(0.39)
0
(0)
0
(0)
1
(0.04)
0
(0)
1
(0.04)
40
(1.57)
85
(3.35)
383
(15.08)
ஆதாரம்: Climate-data.org

மக்கள் தொகை

[தொகு]

2016 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்த ஈரான் நகரங்களின் மக்கள் தொகை அடர்வில், இந்த நகரம் 83 வது இடத்தினைப் பெறுகிறது.[1] பொதுவாக ஈரான் நாட்டில் நகரங்களில் மக்கள் குடியேற்றம், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, வேகமாக அதிகரித்து வருகின்றது என ஐக்கிய நாட்டு ஆய்வுகள் கூறுகின்றன.[2][3] 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள் தொகை 119,399 நபர்களைக் கொண்டிருந்தது. இதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட, அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அதாவது 2011 ஆம் ஆண்டு, 117,093 நபர்கள், இந்நகரத்தில் வாழ்ந்திருந்தனர். தற்பொழுது உள்ள மக்கள் தொகை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்நகரத்தின் மக்கள்தொகை அடர்வு 1.97% அதிகரித்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 https://www.amar.org.ir/english
  2. Asia-Pacific Population Journal, United Nations. "A New Direction in Population Policy and Family Planning in the Islamic Republic of Iran". Archived from the original on 14 February 2009. பார்க்கப்பட்ட நாள் 14 April 2006.
  3. "Iran – population". Countrystudies.us. பார்க்கப்பட்ட நாள் 18 June 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈதகு&oldid=3085959" இலிருந்து மீள்விக்கப்பட்டது