இ. பாலநந்தன்
இ. பாலநந்தன் (E.Balananthan) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1924ஆம் ஆண்டு சூன் 16ஆம் தேதி பிறந்தார். இவர் கேரள மாநிலத்தின் பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்தவர். நந்தன் 1978ஆம் ஆண்டு முதல் இந்திய பொதுவுடமைக் கட்சி (இடதுசாரி) கட்சியின் முதன்மை நிர்வாகியாகவும் அரசியல் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
கொல்லம் மாவட்டம் சக்திகுளங்கரா என்னும் ஊரில் ராமன், ஈசுவரி பால நந்தன் தம்பதிகளுக்கு மகனாக இவர் பிறந்தார். தன் அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் ஆரம்பித்தார். பிறகு 1943ஆம் ஆண்டு முதல் இந்திய பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். பின் 1964ஆம் ஆண்டு முதல் இந்திய பொதுவுடமைக் கட்சி (இடது சாரி) கட்சியில் பணியாற்றி வருகின்றார்..
கேரள சட்டமன்ற உறுப்பினராக 1967ஆம் ஆண்டு முதல் 1977ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். 1980ஆம் ஆண்டு நான்கு வருடங்களுக்கு ஏழாவது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முகுந்தபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நாடாளுமன்ற மேலவைக்கு இரண்டு முறை 1988ஆம் ஆண்டு மற்றும் 1994ஆம் ஆண்டுகளில் கேரளாவிலிருந்து தேர்தெடுக்கப்பட்டார். நந்தன் இந்திய தொழிற் சங்க மையம் மற்றும் இந்திய மின்சாரம் ஊழியர் கூட்டமைப்புகளின் தலைவராகவும் பணியாற்றினார்.
நந்தன் கேரளாவின் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுவாசக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டு 2009ஆம் ஆண்டு சனவரி 19ஆம் தேதி இறந்தார். மேலும் சிறிது காலம் நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ E Balanandan dies பரணிடப்பட்டது 22 சனவரி 2009 at the வந்தவழி இயந்திரம்