உள்ளடக்கத்துக்குச் செல்

இலிசியா வர்தே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலிசியா வர்தே
Licia Verde
2015 ஆம் ஆண்டில் வர்தே
பிறப்பு14 October 1971 (1971-10-14) (வயது 53)
வெனிசு, இத்தாலி
வாழிடம்இசுபெய்ன்
குடியுரிமைஇத்தாலியர்
தேசியம்இத்தாலியர்
துறைஅண்டவியல், இயற்பியல், வானியற்பியல்
பணியிடங்கள்எடின்பர்கு பல்கலைக்கழகம்
பிரின்சுடன் பலகலைக்கழகம்
பென்சில்வேனியா பல்கலைக்கழகம்
கட்டலான் ஆராய்ச்சி, உயராய்வு நிறுவனம், பார்சிலோனா பல்கலைக்கழகம்
ஓசுலோ பல்கலைக்கழகம்
இராடுகிளிப் உயராய்வு நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்பாடுவா பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஆலன் எஃப், கீவென்சு
Other academic advisorsசபினோ மதரசே
அறியப்படுவதுஅண்ட நுண்ணலைப் பின்னணி
அண்டப் பேரியல் கட்டமைப்பு
விருதுகள்[[குரூபர் அண்டவியல் பரிசு (2012)
ISI உயர் மேற்கோள் ஆய்வாலர்]] (2015)
ஐரோப்பிய ஆராய்ச்சி மன்ற விருது (2009 & 2016)
நார்சிசு மாந்தூரியல் பதக்கம் (2017)
அடிப்படை இயற்பியலில் பெருந்தகைமைப் பரிசு (2018)

இலிசியா வர்தே (Licia Verde) (பிறப்பு: 1971, வெனிசு, இத்தாலி) ஓர் அண்டவியலாளரும் கோட்பாட்டு இயற்பியலாளரும் ஆவார். இவர் இப்போது பார்சிலோனா பல்கலைக்கழக கட்டலான் ஆராய்ச்சி, உயராய்வு நிறுவனத்தில் [1] இயற்பியல், வானியற்பியல் பேராசிரியராக உள்ளார்.[2] இவரது ஆய்வு ஆர்வம் அண்டப் பேரியல் கட்டமைப்பு, கருப்பு ஆற்றல், உப்பல்நிலை அண்டம் அண்ட நுண்ணலைப் பின்னணி ஆகியவற்றில் குவிந்துள்ளது.

வாழ்க்கைப்பணி

[தொகு]

இவர் 2000 முதல் 2003 வரை அமெரிக்காவில் பிரின்சுடன் பல்கலைக்கழக வானியற்பியல் புலங்களின் இணை ஆய்வாளராக இருந்தார்.
இவர் 2003 முதல் 2007 வரை அமெரிக்க பென்சில்வேனியா பல்கலைக்கழக இயற்பியல், வானியல் துறையின் பேராசிரியராக இருந்தார்.
இவர் 2007 முதல் 2009வரை பிரின்சுடன் பல்கலைக்கழக வானியற்பியல் துறையில் வருகைதரு முதுநிலை ஆராய்ச்சி நல்கை பெற்ர உறுப்பினராக இருந்தார்.
இவர் 2007 இல் இருந்து அண்மைவரை இசுபெய்ன் பார்சிலோனா பல்கலைக்கழகத்தின் கட்டலான் ஆராய்ச்சி, உயராய்வு நிறுவன (ICREA) அண்டவியல் பேராசிரியராக உள்ளார்.
இவர் 2012 முதல் 2013 வரை சுவிட்சர்லாந்து செர்ன் இணை ஆய்வாளராக இருந்தார்.
இவர் 2013 முதல் 2016 வரை நார்வே ஓசுலோ பல்கலைக்கழக வானியல், இயற்பியல் பேராசிரியராக இருந்தார்.
இவர் 2015 முதல் 2016 வரை அமெரிக்க ஆர்வார்டு பல்கலைக்கழக் இராடுகிளிப் உயராய்வு நிறுவன ஆய்வுறுப்பினராக இருந்தார்.

தகைமைகளும் விருதுகளும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ICREA".
  2. "ICCUB".

வெளி இணைப்புகள்

[தொகு]

[1] [2]

  1. Home page
  2. [https://web.archive.org/web/20210609102731/https://www.icrea.cat/security/files/researchers/files-maintenance/cv_verde_0.pdf பரணிடப்பட்டது 2021-06-09 at the வந்தவழி இயந்திரம் official CV at ICREA]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலிசியா_வர்தே&oldid=3986487" இலிருந்து மீள்விக்கப்பட்டது