இலார்ணைட்டு
இலார்ணைட்டு Larnite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | நெசோசிலிக்கேட்டுகள் |
வேதி வாய்பாடு | Ca2SiO4 |
இனங்காணல் | |
நிறம் | வெண்மை முதல் சாம்பல் வரை |
படிக இயல்பு | தட்டையான வடிவமற்ற மணிகள்; திரட்சி |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
இரட்டைப் படிகமுறல் | பொது, பலசெயற்கை இணை {100} |
பிளப்பு | சரிபிளவு {100}, ஒழுங்கற்ற பிளவு {010} |
மோவின் அளவுகோல் வலிமை | 6 |
மிளிர்வு | பளபளபளப்பானது |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளி புகும் மற்றும் கசியும் |
ஒப்படர்த்தி | 3.28–3.33 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு ( ) |
ஒளிவிலகல் எண் | nα = 1.707 nβ = 1.715 nγ = 1.730 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.023 |
2V கோணம் | 74° கணக்கிடப்பட்டது |
நிறப்பிரிகை | r > v |
மேற்கோள்கள் | [1] |
இலார்ணைட்டு (Larnite) என்பது Ca2SiO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கால்சியம் சிலிக்கேட்டு வகை கனிமமான இது ஆலிவைன் தாதுக் குழுவின் கால்சியம் உறுப்பினராகக் கருதப்படுகிறது. பன்னாட்டு கனிமவியலாளர் சங்கம் இலார்ணைட்டு கனிமத்தை Lrn[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
1929 ஆம் ஆண்டு வடக்கு அயர்லாந்தின் இலார்ன் நகரத்தில் உள்ள இசுகாவ்ட்டு எரிமலையில் இலார்ணை கனிமம் கண்டறியப்பட்டது. செசில் எட்கர் டில்லி என்பவர் இதை கண்டறிந்தார். கண்டறியப்பட்ட இடத்தின் பெயர் நினைவாக கனிமத்திற்கு இலார்ணைட்டு எனப் பெயரிடப்பட்டது. [1] வோலாசுடோணைட்டு, இசுபுரைட்டு, பெரோவ்சிகைட்டு, மெர்விணைட்டு, மெலிலைட்டு மற்றும் கெகிலெணைட்டு ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து இலார்ணைட்டு காணப்படுகிறது. பாசால்டிக்கு அக்னிப்பாறைகளுக்கிடையின் ஊடுருவலுக்கு அருகில் உள்ள தொடர்பு உருமாற்றம் செய்யப்பட்ட சுண்ணாம்பு மற்றும் சுண்ணாம்பு கற்கள் ஆகியவற்றில் இக்கனிமம் கிடைக்கிறது.[1]
இருகால்சியம் சிலிக்கேட்டு வேதியியல் ரீதியாக β-Ca2SiO4 சேர்மம் ஆகும். சில சமயங்களில் இலட்சியப்படுத்தப்பட்ட ஆக்சைடு சேர்மத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடும் 2CaO·SiO2 குறிப்பிடப்படுவதுண்டு. சிமெண்ட்டு வேதியியலாளர் தங்கள் குறியீட்டில் C2S எனக் குறிப்பிடுவர். சிமெண்ட்டு தொழிலில் பயன்படுத்தப்படும் போது, இக்கனிமம் பொதுவாக பெலைட்டு என்று அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Larnite on Mindat.org
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- Deer, William Alexander; Howie, R. A; Zussman, J (1986). "Larnite". Disilicates and ring silicates. pp. 248–249. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-897799-89-5.