உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜா போஜன் வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 23°17′15″N 077°20′15″E / 23.28750°N 77.33750°E / 23.28750; 77.33750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜா போஜன் வானூர்தி நிலையம்
Raja Bhoj Airport
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவதுபோபால், செஹோர், கோசாங்காபாத், ரெய்சென் மத்தியப் பிரதேசம்
அமைவிடம்காந்திநகர், போபால்
உயரம் AMSL1,719 ft / 524 m
ஆள்கூறுகள்23°17′15″N 077°20′15″E / 23.28750°N 77.33750°E / 23.28750; 77.33750
நிலப்படம்
BHO is located in மத்தியப் பிரதேசம்
BHO
BHO
வானூர்ந்தி நிலையம் அமைவிடம்
BHO is located in இந்தியா
BHO
BHO
BHO (இந்தியா)
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
06/24 3,420 1,835 தார்/அஸ்பால்ட்
12/30 9,022 2,744 அஸ்பால்ட்
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2019 - மார்சி 2020)
பயணிகள் போக்குவரத்து1331332Increase 64.3%
விமானப் போக்குவரவு14374 Increase 62.2%
சரக்கு கையாளுதல்1526 12.6%

இராஜா போஜன் வானூர்தி நிலையம் (Raja Bhoj Airport) (ஐஏடிஏ: BHOஐசிஏஓ: VABP) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலிற்கு வானூர்தி சேவையாற்றும் விமான நிலையமாகும். இது போபாலில் அமைந்துள்ள முதன்மையான வானூர்தி நிலையமாகும். 10ஆம் நூற்றாண்டின் பரமாரப் பேரரசு மன்னர் போஜனின் பெயர் இந்நிலையத்திற்கு இடப்பட்டுள்ளது. இந்தூரில் உள்ள தேவி அகில்யாபாய் ஓல்கர் வானூர்தி நிலையத்தினைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தின் இரண்டாவது பெரிய வானூர்தி நிலையம் இதுவாகும்.

இது போபாலின் வடமேற்குப் பகுதியில், நகரத்தின் மையத்திலுள்ள போபால் சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், நகரின் தெற்கே உள்ள ஹபீப்கஞ்ச் தொடருந்து நிலையத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த வானூர்தி நிலையம் தேசிய நெடுஞ்சாலை 46 (போபால் சுற்றுச் சாலை) மற்றும் போபாலை இந்தூருடன் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 18 ஆகியவற்றின் சந்திப்புக்கு அருகில் உள்ளது.

வளர்ச்சி

[தொகு]

ஓடுபாதை

[தொகு]

2010இல், ஓடுபாதையின் நீளம் 2,744 மீட்டர்கள் (9,003 அடி) என இருந்தது. இதனால் போபாலில் பெரிய வானூர்திகள் தரையிறங்குவது சாத்தியமாக்குகிறது.[4] போபாலிருந்து ஜெட்டாவிற்கு ஹஜ் பன்னாட்டு விமானச் சேவை, 23 அக்டோபர் 2010 ஹஜ் பயணத்தின் போது இயக்கப்பட்டது.[5]

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

[தொகு]

2013ஆம் ஆண்டில், வானூர்தி நிலைய பயன்பாட்டு கட்டட மின்சாரத் தேவைக்குச் சூரிய சக்தியைப் பயன்படுத்திய முதல் வானூர்தி நிலையமாக மாறியது. 100 கிலோவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் சூன் 2013இல் செயல்படுத்தப்பட்டது.[6] எதிர்காலத்தில் வானூர்தி நிலையத்தில் 2 மெகாவாட் சூரிய மின் நிலையத்தை நிறுவத் திட்டமிட்டுள்ளது. வானூர்தி நிலையத்தில் இரவில் வானூர்திகள் தரையிறங்கும் வசதிகள்(ஐ.எல்.எஸ்) மற்றும் கேட் VII தீயணைப்பு சேவைகள் உள்ளன.[7]

சரக்கு மற்றும் தளவாட மையம்

[தொகு]

வானூர்தி நிலையத்திற்கு அருகே 17 ஏக்கர் பரப்பில் சரக்குகளைக் கையாளும் பெட்டக பகுதியும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பழைய முனையக் கட்டிடத்திலிருந்து சரக்கு நடவடிக்கைகளை அதிகரிக்க, சரக்கு வளாகமாக மறுவடிவமைக்கப்படுகிறது. தற்காலிக விமான சரக்கு வளாகம் அக்டோபர் 2019க்குள் திறக்கப்படும்.[8]

குடிவரவு சோதனை இடுகை மற்றும் சர்வதேச விமானங்கள்

[தொகு]

செப்டம்பர் மாதம், ராஜா போஜ் வானூர்தி நிலையத்திற்கு பன்னாட்டு அங்கீகாரம் வழங்குவதற்கான செயல்முறையை டி.ஜி.சி.ஏ. தொடங்கியது.[9] நவம்பர் 2019-ல், குடியேற்ற வசதிகளைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை மறுஆய்வு செய்வதற்காக உள்துறை அமைச்சகம் மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கூட்டு மையக் குழு வானூர்தி நிலையத்தினை ஆய்வு செய்தது. பன்னாட்டு வானூர்தி சேவையினைத் தொடங்கப் பெரிதாகப் பிரச்சனைகள் பெரிய தடைகள் எதுவும் இல்லை.[9] இதன் மூலம், விமான நிலையம் குடியேற்றச் சோதனைச் சாவடியாக மாற உள்ளது. இது சர்வதேச விமானங்களை இயக்குவதற்கான கட்டாயத் தேவையாகும்.[9]

வான்பாலத்திலிருந்து கவசத்தின் காட்சி.

ஒருங்கிணைந்த முனையம்

[தொகு]

ரூ .1.35 கோடி மதிப்புள்ள ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தினை 28 சூன் 2011 அன்று அப்போதைய பயணிகள் விமான போக்குவரத்து அமைச்சர் வயலார் ரவி திறந்து வைத்தார்.[10] பன்னாட்டு முனையகம் கட்ட மாநில அரசு 400 ஏக்கர் நிலத்தை வழங்கியிருந்தது. முனையக் கட்டிடம் 26,936 சதுர மீட்டர்கள் (289,940 sq ft) மற்றும் 14 சோதனை பகுதிகள், புறப்படுவதற்கு 4 குடிவரவு பகுதிகள் மற்றும் வருகைக்கு 6 குடிவரவு பகுதிகள் உள்ளன.

போபால் விமான நிலையத்தின் உள்பகுதி
பார்வை மாடத்திலிருந்து முனையம்

இந்த வானூர்தி நிலையம் இருபத்தி இரண்டு சுங்க பணிக்களத்தினையும், வருகைக்கு 11 மற்றும் புறப்படுவதற்கு 11, மற்றும் பாதுகாப்புக்காக ஆறு ஊடுகதிர் இயந்திரங்களையும் கொண்டுள்ளது.[7] முனையத்தில், இப்போது, ஒரு உணவு விடுதி மற்றும் சில சில்லறை விற்பனைக் கடைகளும் உள்ளன. இவை இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தின் (AAI) முதன்மை சலுகையின் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளன. முனையம் 2 வான்பாலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.[11] மூன்றாவது வான்பாலம் 2019 அக்டோபர் நடுப்பகுதியில் கட்டப்பட்டது.[12]

விமான நிறுவனங்கள் மற்றும் இடங்கள்

[தொகு]
விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஏர் இந்தியாதில்லி, மும்பை, புனே[13]
பிளைபிக்அகமதாபாது, ராய்ப்பூர்[14]
இன்டிகோஆக்ரா,[15] அகமதாபாது,[16] பெங்களூரு, தில்லி, ஐதராபாத், மும்பை

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Traffic News for the month of March 2019: Annexure-III" (PDF). Airports Authority of India. 1 May 2019. p. 3. பார்க்கப்பட்ட நாள் 1 May 2019.
  2. "Traffic News for the month of March 2019: Annexure-II" (PDF). Airports Authority of India. 1 May 2019. p. 3. Archived from the original (PDF) on 1 May 2018. பார்க்கப்பட்ட நாள் 1 May 2019.
  3. "Traffic News for the month of March 2018: Annexure-IV" (PDF). Airports Authority of India. 1 May 2018. p. 3. Archived from the original (PDF) on 1 May 2018. பார்க்கப்பட்ட நாள் 1 May 2018.
  4. "Direct Haj flight from Bhopal". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 3 June 2010 இம் மூலத்தில் இருந்து 6 ஜனவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140106182955/http://www.hindustantimes.com/india-news/direct-haj-flight-from-bhopal/article1-552532.aspx. 
  5. "First direct flight from Bhopal to Jeddah from tomorrow". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 October 2010. http://timesofindia.indiatimes.com/india/First-direct-flight-from-Bhopal-to-Jeddah-from-tomorrow/articleshow/6785546.cms. 
  6. "Raja Bhoj airport all set to use solar energy". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 20 June 2013. http://www.hindustantimes.com/bhopal/raja-bhoj-airport-all-set-to-use-solar-energy/article1-1079501.aspx. [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு]
  7. 7.0 7.1 "New terminal of Bhopal international airport opened for public" (PDF). Airports International Indian edition. August 2011. Archived from the original (PDF) on 11 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 16 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Bhopal to get air cargo services within a month". Latest Indian news, Top Breaking headlines, Today Headlines, Top Stories at Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-14.
  9. 9.0 9.1 9.2 Nov 7, TNN | Updated; 2019; Ist, 4:15. "Immigration facility at Raja Bhoj airport soon | Bhopal News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-14. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
  10. "New terminal of Bhopal international airport opened for public". Daily News & Analysis. 28 June 2011. http://www.dnaindia.com/india/report-new-terminal-of-bhopal-international-airport-opened-for-public-1560104. 
  11. "Soon, MNC restaurant at Bhopal airport for quality food - Times of India". https://timesofindia.indiatimes.com/city/bhopal/soon-mnc-restaurant-at-bhopal-airport-for-quality-food/articleshow/62681142.cms. 
  12. 10 Jan, Ramendra Singh | TNN | Updated; 2019; Ist, 8:04. "Third aerobridge at Bhopal airport by October | Bhopal News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-18. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
  13. "Air India's Bhopal-Pune flight will start from March 28". Naidunia. பார்க்கப்பட்ட நாள் 31 January 2021.
  14. "Flybig". பார்க்கப்பட்ட நாள் 3 April 2021.
  15. "IndiGo New Flight Information Status And Schedule". பார்க்கப்பட்ட நாள் 22 March 2021.
  16. "IndiGo to commence Bhopal-Allahabad service on 28 March 2021". பார்க்கப்பட்ட நாள் 22 March 2021.

 

வெளி இணைப்புகள்

[தொகு]