இந்திரா நூயி
இந்திரா நூயி | |
---|---|
பிறப்பு | இந்திரா கிருஷ்ணமூர்த்தி அக்டோபர் 28, 1955 சென்னை, சென்னை மாநிலம், இந்தியா (தற்போது சென்னை, தமிழ்நாடு) |
குடியுரிமை | அமெரிக்கன்[1] |
கல்வி | சென்னைப் பல்கலைக்கழகம் (இளம் அறிவியல்) இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தா (முதுகலை வணிக மேலாண்மை) யேல் பல்கலைக்கழகம் (முதுகலை அறிவியல்) |
அறியப்படுவது | பெப்சிகோவின் முன்னாள் செயல் அதிகாரி |
வாழ்க்கைத் துணை | ராஜ் நூயி (தி. 1981) |
பிள்ளைகள் | 2 |
உறவினர்கள் | சந்திரிகா தாண்டன் (sister)[2] |
வலைத்தளம் | |
https://www.indranooyi.com/ |
இந்திரா நூயி (Indra Nooyi பிறப்பு அக்டோபர் 28, 1955) ஓர் இந்திய-அமெரிக்க வணிக நிர்வாகி மற்றும் பெப்சிகோவின் முன்னாள் முதன்மை செயல் அதிகாரி மற்றும் தலைவர் ஆவார்.[3][4][5]
உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளார்.[6] 2014 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் 13வது இடத்தைப் பிடித்தார் [7] மேலும் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் பார்ச்சூன் பட்டியலில் இரண்டாவது சக்திவாய்ந்த பெண்மணியாகத் திகழ்ந்தார் [8][9] அமேசான் மற்றும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையிலும் வாரியங்களிலும் பணியாற்றுகிறார்.[10][11]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]நூயி 1955 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி, இந்தியாவில், தமிழ்நாடு மதராசில் (இப்போது சென்னை என அழைக்கப்படுகிறது) பிறந்தார்.[12][13][14] தனது பள்ளிப்படிப்பை தி.நகரில் உள்ள புனித தேவதை ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார் . [15]
கல்வி
[தொகு]நூயி 1974 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சென்னை கிறித்துவக் கல்லூரியில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் இளங்கலைப் பட்டங்களையும், 1976 இல் கல்கத்தா இந்திய மேலாண்மை நிறுவனத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[16]
1978 இல், நூயி வணிக மேலண்மைப் பள்ளியில் சேர்க்கப்பட்டு, அமெரிக்காவிற்குச் சென்றார், அங்கு 1980 இல் பொது மற்றும் தனியார் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார் [17]
தொழில் வாழ்க்கை
[தொகு]இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் மற்றும் ஜவுளி நிறுவனமான பியர்ட்செல் லிமிடெட் ஆகியவற்றில் தயாரிப்பு மேலாளர் பதவிகளை வகித்தார். யேல் வணிகப் பள்ளியில் கல்வி பயிலும்போது ,கோடைகால உள்ளகப் பயிற்சியை பூஸ் ஆலன் ஹாமில்டனில் முடித்தார்.[17] 1980 இல், பாஸ்டன் ஆலோசனைக் குழுமத்தில் (BCG) உத்தி ஆலோசகராக சேர்ந்தார்,[18] பின்னர் மோட்டோரோலாவில் துணைத் தலைவர் மற்றும் வணிக வியூக வகுப்பாளர் மற்றும் திட்டமிடல் இயக்குநராகப் பணிபுரிந்தார்,[19] அதைத் தொடர்ந்து ஏசியா பிரவுன் பொவேரியில் பணியாற்றினார்.[20]
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
[தொகு]ஜனவரி 2008 இல், நூயி அமெரிக்க-இந்திய வணிக குழுமத்தின் (USIBC) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நூயி USIBC இன் இயக்குநர்கள் குழுவிற்கு தலைமை தாங்குகிறார், இது அமெரிக்க தொழில்துறையின் குறுக்கு பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் 60 க்கும் மேற்பட்ட மூத்த நிர்வாகிகளைக் கொண்டுள்ளது.[21][22]
2008 இல்,அமெரிக்கக் கலை மற்றும் அறிவியல் அகாதமியின் ஆய்வுதவித் தொகைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[23]
2008 இல்,அமெரிக்காவின் சிறந்த தலைவர்களில் ஒருவராக யுஎஸ் நியூஸ் & வேர்ல்டு ரிப்போர்ட் மூலம் பெயரிடப்பட்டார்.[24]
நூயி ஜூலை 2009 இல் குளோபல் சப்ளை செயின் லீடர்ஸ் குழுவினால் [25] சிறந்த தலைமை நிர்வாக அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2009 ஆம் ஆண்டில், பிரெண்டன் வுட் இன்டர்நேஷனல் என்ற ஆலோசனை நிறுவனத்தால் "தி டாப்கன் தலைமை நிர்வாக அதிகாரிகளில்" ஒருவராக நூயி கருதப்பட்டார்.[26][27]
பார்ச்சூன் பத்திரிகை 2006, 2007, 2008, 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கான வணிகத்தில் மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் வருடாந்திர தரவரிசையில் நூயிக்கு முதலிடம் அளித்துள்ளது [28][29][30][31]
2008 முதல் 2011 வரையிலான அனைத்து அமெரிக்க நிர்வாகக் குழு ஆய்வில் நிறுவன முதலீட்டாளரின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி பட்டியலில் நூயி பெயரிடப்பட்டார் [32] ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கிராஃப்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஐரீன் ரோசன் ஃபீல்டு அமெரிக்க வணிகத்தில் மிகவும் சக்திவாய்ந்த பெண்மணியாக முதலிடம் பெற்றார்.[33]
சான்றுகள்
[தொகு]- ↑ "2007 Outstanding American by Choice Recipients". United States Citizenship and Immigration Services. 22 August 2011.
- ↑ Goudreau, Jenna. "Indra Nooyi and Chandrika Tandon - pg.7". Forbes.
- ↑ "PepsiCo CEO Indra Nooyi Is Stepping Down After 12 Years" (in en). NPR.org. https://www.npr.org/2018/08/06/638639879/pepsico-ceo-indra-nooyi-is-stepping-down-after-12-years.
- ↑ "Leadership". PepsiCo, Inc. Official Website (in ஆங்கிலம்).
- ↑ "PepsiCo, Inc. (NYSE:PEP) : Second Quarter 2010 Earnings Preview". IStock Analyst. 15 July 2010. http://www.istockanalyst.com/article/viewarticle/articleid/4311403. பார்த்த நாள்: 11 December 2010.
- ↑ "Forbes Magazine's List of The World's 100 Most Powerful Women". Forbes. https://www.forbes.com/wealth/power-women.
- ↑ "#13 Indra Nooyi". Forbes. பார்க்கப்பட்ட நாள் 20 June 2014.
- ↑ "The World's Most Powerful Women 2015". Forbes. https://www.forbes.com/sites/carolinehoward/2015/05/26/the-worlds-most-powerful-women-2015/#1452455a44ec.
- ↑ Howard, Caroline. "The 19 Most Powerful Women In Business 2017: CEOs And More With Ambitious Goals". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-02.
- ↑ "PepsiCo's former CEO Indra Nooyi joins Amazon's Board of Directors". https://www.businesstoday.in/top-story/pepsico-former-ceo-indra-nooyi-joins-amazon-board-of-directors/story/322345.html.
- ↑ "ICC appoints Indra Nooyi as Independent Director".
- ↑ "Personal side of Indra Nooyi". Timesofindia-economictimes. 7 February 2007. பார்க்கப்பட்ட நாள் 26 May 2015.
- ↑ The New CEOs: Women, African American, Latino, and Asian American Leaders of Fortune 500 Companies. Rowman & Littlefield Publishers.
- ↑ "Pride of Chennai". ITZChennai. 2015. Archived from the original on 8 November 2014. பார்க்கப்பட்ட நாள் 8 November 2014.
- ↑ "Who is Indra Nooyi?". The Indian Express. 6 August 2018. பார்க்கப்பட்ட நாள் 13 October 2018.
- ↑ ""Indra Nooyi Biography." - Life, Family, Children, Parents, School, Mother, Born, College, House". Newsmakers Cumulation — Encyclopedia of World Biography. பார்க்கப்பட்ட நாள் 26 May 2015.
- ↑ 17.0 17.1 Sellers, Patricia (2 October 2006). "It's good to be the boss". CNN. https://money.cnn.com/2006/09/29/magazines/fortune/mpw.femaleCEOs.intro.fortune/index.htm.
- ↑ "Indra Nooyi: The Indian executive who broke glass ceiling in corporate America". தி எகனாமிக் டைம்ஸ். 7 August 2018. https://economictimes.indiatimes.com/news/company/corporate-trends/indra-nooyi-the-indian-executive-who-broke-glass-ceiling-in-corporate-america/articleshow/65295723.cms.
- ↑ .
- ↑ "Alumni Leaders — Indra Nooyi '80". Yale School of Management. Archived from the original on 8 March 2010. பார்க்கப்பட்ட நாள் 9 July 2009.
- ↑ U.S. Chamber of Commerce(23 January 2009). "PepsiCo's Indra K. Nooyi Elected Chairman of U.S.-India Business Council". செய்திக் குறிப்பு.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ U.S. Chamber of Commerce(16 January 2009). "USIBC Leads U.S. Commercial Nuclear Executives to Help Implement Historic Nuclear Deal". செய்திக் குறிப்பு.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Academy Announces 2008 Class of Fellows". American Academy of Arts & Sciences. 28 April 2008. Archived from the original on 18 June 2009. பார்க்கப்பட்ட நாள் 9 July 2009.
- ↑ "America's Best Leaders: Indra Nooyi, PepsiCo CEO". பார்க்கப்பட்ட நாள் 20 November 2008.
- ↑ India-born Indra Nooyi named CEO of the year. economictimes.indiatimes.com. 14 July 2009
- ↑ The Market's Best Managers – Forbes.com, Forbes.com
- ↑ Brendan Wood International Announces 24 TopGun CEOs in the US பரணிடப்பட்டது 18 சனவரி 2016 at the வந்தவழி இயந்திரம், Reuters.com
- ↑ "50 Most Powerful Women 2006: #1". https://money.cnn.com/popups/2006/fortune/mostpowerfulwomen/1.html.
- ↑ "50 Most Powerful Women 2007: #1". https://money.cnn.com/galleries/2007/fortune/0709/gallery.women_mostpowerful.fortune/index.html.
- ↑ "50 Most Powerful Women 2008: #1". 16 October 2008. https://money.cnn.com/galleries/2008/fortune/0809/gallery.women_mostpowerful.fortune/index.html.
- ↑ "50 Most Powerful Women 2009: #1". 15 September 2009. https://money.cnn.com/galleries/2009/fortune/0909/gallery.most_powerful_women.fortune/index.html.
- ↑ The All-America Executive Team Best CEOs பரணிடப்பட்டது 12 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம், InstitutionalInvestor.com
- ↑ "Indra Nooyi second most powerful woman in US business". Indiavision news. 1 Oct 2011. Archived from the original on 26 January 2013.
வெளியிணைப்புகள்
[தொகு]- PepsiCo corporate biography
- Forbes Profile: Indra Nooyi
- The Pepsi Challenge, profile Indra Nooyi (Fortune)
- Reference for Business: Indra Nooho Leadership Biography
- Video of discussion with Indra Nooyi at the Asia Society, New York, 4/14/2009
- Indra Nooyi பரணிடப்பட்டது சூன் 26, 2017 at the வந்தவழி இயந்திரம் Video produced by Makers: Women Who Make America
- Appearances on C-SPAN
- Harvard Business Review: Becoming a Better Corporate Citizen