இந்திரம்மா
இந்திரம்மா (Indiramma) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வீடு கட்டிக் கொடுக்கும் திட்டமாகும். கிராமப்புறப் பகுதிகள் மற்றும் மாதிரி நகராட்சி பகுதிகளில் ஒருங்கிணைந்த புதிய வீடு மேம்பாட்டுத் திட்டம் என்பதன் சுருக்கமே இந்திரம்மா வீடு கட்டும் திட்டமாகும். ஆந்திர மாநிலத்தில் கிராமப்புறங்களில் வாழும் மக்கள் இத்திட்டத்தால் பயனடைவர்.[1][2][3]
வரலாறு
[தொகு]2006 ஆம் ஆண்டில் ஒய்.எசு. ராசசேகர ரெட்டி ஆந்திராவின் முதல்வராக இருந்தபோது திட்டம் தொடங்கியது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்றுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
திட்டம்
[தொகு]இந்திரம்மா வீட்டுவசதி என பிரபலமாக அறியப்படும் இத்திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் மிகப்பெரியதாகும். மூன்று ஆண்டு காலப்பகுதியில் 60 லட்சம் வீடுகளை கட்டி முடிப்பது திட்டத்தின் இலக்காகும். 2006-07 ஆண்டில் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் 5,000 கோடி ரூபாய் செலவில் மூன்று கட்டங்களாக திட்டம் நிறைவேற்றப்படுவதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டது. இந்திரம்மா திட்டம் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களுக்கு நிதி வழங்குகிறது. 2013 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கான அரசாங்கத்தின் ஆதரவு கீழ்கண்டவாறு அமைந்திருந்தது.
திறந்த வகை உயர் சாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு கிராமப்புறங்களில் ரூ. 45,000 முதல் ரூ. 70,000 வரையிலும், நகர்ப்புறங்களில் ரூ. 55,000 முதல் ரூ. 80,000 வரையிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பட்டியல் இனத்தாருக்கு நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் ரூ .1.2 லட்சம் நிதியளிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Archive News". தி இந்து. 2007-11-01. Archived from the original on 2007-11-02. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Indiramma housing scheme enters 2nd phase | Business Line". Thehindubusinessline.com. 2007-09-06. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
- ↑ "Archive News". தி இந்து. 2009-06-20. Archived from the original on 2009-06-24. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)