இசைஞானியார் நாயனார்
இசைஞானியார் நாயனார் | |
---|---|
பெயர்: | இசைஞானியார் நாயனார் |
குலம்: | ஆதி சைவர் |
பூசை நாள்: | சித்திரை சித்திரை |
அவதாரத் தலம்: | ஆரூர் (கமலாபுரம்) |
முக்தித் தலம்: | திருநாவலூர் |
இசைஞானியார் என்பவர் சைவ சமயத்தில் நாயன்மார்கள் எனப் போற்றப்பெறும் அறுபத்து மூவரில் உள்ள மூன்று பெண்மணிகளுள் ஒருவராவார். இவர் சைவக்குரவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை ஆவார்[1][2][3]. சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றமைக்காகவும், சைவநெறியில் நின்றமைக்காகவும் அவரது பெற்றோர்கள் இருவரையுமே நாயன்மார்கள் பட்டியலில் சேக்கிழார் இணைத்துள்ளார்.
தொன்மம்
[தொகு]திருவாரூரில் வாழ்ந்த ஞான சிவாச்சாரியாருக்கு மகளாகப் பிறந்தார். இவர் கௌதம கோத்திரத்தினை சேர்ந்தவர். திருவாரூரில் உள்ள சிவபெருமானின் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இசைஞானியார் திருமணப் பருவத்தினை அடைந்ததும், ஞான சிவாச்சாரியார் சிவபக்தரான சடையநாயனார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
இசைஞானியார் - சடையநாயனார் தம்பதியினருக்கு மகனாக சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்தார்.
குருபூசை
[தொகு]இசைஞானியார் குருபூசை நாள்: சித்திரைச் சதயம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 63 நாயன்மார்கள், ed. (01 மார்ச் 2011). இசை ஞானியார். தினமலர் நாளிதழ்.
{{cite book}}
: Check date values in:|year=
(help)CS1 maint: numeric names: editors list (link) - ↑ http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=111&pno=184
- ↑ மகான்கள், ed. (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ்.
{{cite book}}
: Check date values in:|year=
(help)
- பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்