திருவாலவாய்
Appearance
(ஆலவாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- ஆலவாய் என்ற பெயரைக் கொண்ட மற்றொரு ஊரைப் பற்றி அறிய, ஆலுவா என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
திருவாலவாய் என்பது புராணங்களில் குறிப்பிடப்படும் தொன்மவியல் பாண்டியர்களின் தலை நகரங்களுள் ஒன்று. கீர்த்தி பூசன பாண்டியன் ஆட்சியில் தலைநகரம் தென்மதுரையிலிருந்து இங்கு மாற்றப்பட்டது.[1]
ஊழியிலும் அழிவுராத இடங்கள்
[தொகு]பாண்டியர்களின் முந்தைய தலைநகரமான மதுரை (தென்மதுரை) கடலுக்கு இரையானாலும் அதில் சில உயர்ந்த இடங்கள் மட்டும் அழிவிலாமல் இருந்ததாக உளது. அவை:[2]
- நீண்ட விழிகளையுடைய உமையம்மையின் திருக்கோயில்
- வானினின்றும் இறங்கிய இந்திரவிமானம்
- பொற்றாமரை குளம்,
- இடபக்குன்றம் - மாட்டின் உருவத்தோடு உள்ள மலை.
- கரிவரை - யானைமலை
- நாகக்குன்றம் - நாகமலை
- ஆன் இழிவரை - பசுமலை
- வராகவரை - பன்றிமலை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ எழில்புனை யதுல கீர்த்தி யெனவிரு பத்தி ரண்டு வழிவழி மைந்த ராகி வையங் காத்த வேந்தர் பழிதவி ரதுல கீர்த்தி பாண்டியன் றன்பா லின்பம் பொழிதர வுதித்த கீர்த்தி பூடணன் புரக்கு நாளில். - திருவாலவாயான படலம், திருவிளையாடல் புராணம்
- ↑ தேனிழி குதலைத் தீஞ்சொற் சேனெடுங் கண்ணி கோயில் வானிழி விமானம் பொற்றா மரைவிளை யாட்டின் வந்த கானிழி யிடபக் குன்றங் கரிவரை நாகக் குன்றம் ஆனிழி வரைவ ராக வரைமுத லழிவி லாத. - திருவாலவாயான படலம், திருவிளையாடல் புராணம்