ஆர்மன் ஓகானியன்
ஆர்மன் ஓகானியன் | |
---|---|
Արմեն Օհանյան | |
தாய்மொழியில் பெயர் | Արմեն Օհանյան |
பிறப்பு | சோபியா பிர்பௌதாகியன் 1887 [சாமாகா, உருசியப் பேரரசு (தற்போது அசர்பைஜான்) |
இறப்பு | 1976 மெக்சிக்கோ நகரம், மெக்சிக்கோ |
தேசியம் | ஆர்மீனியன் |
பணி | நடனம், நடிகை, எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் |
ஆர்மன் ஓகானியன் (Armen Ohanian) (1887 – 1976) சோபியா பிர்பௌதாகியன் என்ற பெயரில் பிறந்த இவர் ஓர் ஆர்மீனிய நடனக் கலைஞரும், நடிகையும், எழுத்தாளரும் மற்றும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.
சுயசரிதை
[தொகு]ஆர்மென் ஓகானியன் உருசியப் பேரரசின் ஒரு பகுதியாயிருந்த (இப்போது அசர்பைஜான்) சாமகாவில் ஒரு உயர் வர்க்க ஆர்மீனிய குடும்பத்தில் பிறந்தார். 1902இல் ஏற்பட்ட ஒரு பூகம்பத்தால் இவரது குடும்பத்தினர் பக்கூவிற்கு குடிபெயர்ந்தனர். அங்கு இவர் ஒரு உருசிய பள்ளியில் பயின்றார். இவர் 1905இல் பட்டம் பெற்றார். அதே ஆண்டு ஆர்மீனிய எதிர்ப்பு படுகொலைகளுக்கு இவர் சாட்சியாக இருந்தது, இவரது தந்தை இமானுவேலின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது. இவர் அவசரமாக ஒரு ஆர்மீனிய ஈரானிய மருத்துவர் ஹைக் தெர்-ஓகானியன் என்பவரை மணந்தார். ஆனால் இத்திருமணம் ஒரு வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. 1906 ஆம் ஆண்டில் பக்கூ ஆர்மீனிய கலாச்சார ஒன்றியத்தின் நாடகக் குழுவில் சோபியா தெர்-ஓகானியனாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். 1908இல் மாஸ்கோவுக்குச் சென்று நெலிடோவா பள்ளியில் பிளாஸ்டிக் கலைகளைப் பயின்றார். அதே நேரத்தில் மாலி தியேட்டரில் தனது முதல் நடனங்களையும் நிகழ்த்தினார்.
ஈரான்
[தொகு]1909ஆம் ஆண்டில் திபிலிசி ஓபராவில் ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு, இவர் முதன்முதலில் ஆர்மென் ஓகானியனாகத் தோன்றினார். பின்னர், இவர் மீண்டும் ஈரானுக்குப் பயணம் செய்தார். அங்கு ஈரானிய அரசியலமைப்பு புரட்சியின் கடைசி காலகட்டத்தில் நடனக் கலைஞராகவும் நடிகையாகவும் நடித்தார். தெகுரானில் உள்ள பாரசீக தேசிய அரங்கின் நிறுவனர்களில் இவரும் ஒருவராவார். 1910 ஏப்ரலில் இவர் பாரசீக மகளிர் நன்மை சங்கத்தின் ஒத்துழைப்புடன் ஒரு இசை மற்றும் இலக்கிய கண்காட்சியை ஏற்பாடு செய்தார். முதல்முறையாக, ஈரானிய பெண்கள் மேடையில் விளையாடவும் ஒரு படம் பார்க்கவும் முடிந்தது. 1910 மே மாதத்தில், நிக்கோலாய் கோகோலின் தி கவர்ன்மென்ட் இன்ஸ்பெக்டர் இன் பெர்சியன் என்ற நாடகத்தில் மரியா அன்டோனோவ்னா என்ற வேடத்தில் நடித்தும் அதை தயாரித்தும் இயக்கியுமுள்ளார்.
நிகழ்ச்சிகள்
[தொகு]ஈரானில் இருந்தபோது, ஓரியண்டல் நடனங்களில் தனது திறமைகளை இவர் முழுமையாக்கினார். பின்னர், நாட்டை விட்டு வெளியேறி எகிப்து மற்றும் ஒட்டோமான் பேரரசில் சுற்றுப்பயணம் செய்தபின், 1911 இல் லண்டனில் நிகழ்ச்சி நடத்த இவர் பணியமர்த்தப்பட்டார். அப்போதிருந்து 1920களின் பிற்பகுதி வரை, அந்த நேரத்தில் மேற்கத்திய கலாச்சாரக் காட்சியைத் தூண்டிய கவர்ச்சியான நடனங்களுக்கான ஆர்வத்தின் ஒரு பகுதியாக, இவர் மிகவும் விரும்பப்பட்ட பெயராக மாறினார். [1]பிரபல அமெரிக்க நடனக் கலைஞர் இசடோரா டங்கன் உருவாக்கிய "இலவச நடனம்" முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், ஆர்மீனிய மற்றும் ஈரானிய இசையை அடிப்படையாகக் கொண்டு தனது சொந்த நடனக் கலைகளை உருவாக்கினார். "சலோம்," "அட் தி டெம்ப்பிள் ஆப் அனாஹித் ," "திரேசான்," "மேட்ச்மேக்கர்," "ஹாசிச்," "தி கெரேட் கான் ஆப் ஷாமகா," "டுவேர்ட்ஸ் நிர்வாணா" போன்ற இவரது பல நடனங்கள் ஐரோப்பாவில் பெருமளவில் ஈர்க்கப்பட்டன. [2] இவர் லண்டன், பாரிஸ், பிரசெல்சு, மிலன், சோபியா, மத்ரித் மற்றும் பிற ஐரோப்பிய நகரங்களிலும், அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிலும் விரிவாக பல நிகழ்ச்சிகளை வழங்கினார். இவரது நடிப்புகள் பத்திரிகைகளில் பரவலாக பாராட்டப்பட்டன. மேலும் மாரிஸ் மாட்டர்லின்க், ரெனே கில், கிளாட் அனெட் போன்ற பலரின் எழுத்தாளர்களின் அங்கீகாரத்தைப் பெற்றன.
குறிப்புகள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- The Dancer of Shamakha by Armen Ohanian (full view)