ஆரோக்கிய நிலை 7
ஆரோக்கிய நிலை 7 (Health Level Seven, ஹெல்த் லெவல் 7, HL7) என்பது மருத்துவமனையின் தகவல் அமைப்புகள் இடையே மருத்துவ மற்றும் நிர்வாக தரவுகளை பரிமாற்ற செய்வதற்கான சர்வதேச தரம் ஆகும். இது திறந்த முறைமை வலைப்பின்னல் மாதிரியில் உள்ள 7வது செயலிகள் அடுக்கினை ஒட்டி அமைக்க்ப்பட்டுள்ளதால் இது ஹெல்த் லெவல் 7 என்றழைக்கப்படுகின்றது.
வரலாறு
[தொகு]197௦ல் முதன் முதலில் சான் பிரான்சிஸ்கோ (UCSF) மருத்துவ மையத்தில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இது உருவாக்கப்பட்டது. மேலும் முதன் முதல் 1981 இல் முதன் முதலில் செயல்படுத்தப்படும். ஆரோக்கிய நிலை 7 1987 இல் நிறுவப்பட்டது.[1]
குறிக்கோள்
[தொகு]இது முற்றிலும் இயங்குதன்மை தொடர்பான தரத்தையும் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் தொடர்பான களத்தில் பராமரிப்பு, ஏற்பாடுகள், உகந்ததாக்க முறையை மேம்படுத்தவும் மற்றும் சுகாதார வழங்குநர்கள், அரசாங்க முகவர், விற்பனையாளர் சமூகம் மற்றும் நோயாளிகள் என பங்குதாரர்களின் மத்தியில் தரவு பரிமாற்ற அதிகரிக்க வழி செய்கிறது.