ஆதேசு சிறீவத்சவா
ஆதேசு சிறீவத்சவா | |
---|---|
பிறப்பு | கட்னி, மத்தியப் பிரதேசம், இந்தியா | 4 செப்டம்பர் 1964
இறப்பு | 5 செப்டம்பர் 2015 மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 51)
தேசியம் | இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1990–2015 |
வாழ்க்கைத் துணை | விஜயதா பண்டிட் |
ஆதேசு சிறீவத்சவா (Aadesh Shrivastava) (4 செப்டம்பர் 1964 - 5 செப்டம்பர் 2015) இந்திய இசையமைப்பாளரும் பாடகரும் ஆவார். ஆரம்பத்தில், ஆர்.டி. பர்மன், ராஜேஷ் ரோஷன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களிடம் முரசு இசைப்பவரகாப் பணியாற்றினார். இவரது தொழில் வாழ்க்கையில், 100 க்கும் மேற்பட்ட இந்திப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். தனது 51 வயதில், மும்பையின் கோகிலாபென் மருத்துவமனையில் புற்றுநோயால் இறந்தார்.[1]
தொழில்
[தொகு]மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கட்னியில் இந்து காயஸ்தர் குடும்பத்தில் பிறந்த இவர், 1993 இல் கன்யாடன் என்ற திரைப்படத்தின் மூலம் தனது முதல் பெரிய அறிமுகத்தைப் பெற்றார். இத்திரைப்படத்தில், ஓ சஜ்னா தில்பார் என்ற பாடலை உதித் நாராயணனுடன் லதா மங்கேஷ்கர் இணைந்து இவரது முதல் பாடலைப் பாடினார். இது வானொலியில் பிரபலமானது. ஆனால் படமும் மற்ற பாடல்களும் கவனிக்கப்படாமல் போனது. அதன் பின்னர் பல வெற்றிகரமானப் பாடல்களுக்கு இசையமைத்து பாடியுள்ளார்.
சர்வதேச அளவில், இவர் எகான்,[2] ஜூலியா போர்டாம் [3] மற்றும் வைக்லெப் ஜீன் போன்ற கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றினார்.[4] எகானுடன் இணைந்து, ஹிட்லாப்.காம் என்ற இணையதளத்தில், புதிய பாடல்களைப் பாடும் இசைக்கலைஞர்களைத் தேடத் தொடங்கினார்.[5] டொமினிக் மில்லர், சக்கீரா மற்றும் டி-பெயின் போன்ற சர்வதேசக் கலைஞர்களுடனும் இவர் பணியாற்றியுள்ளார்.[6]
சொந்த வாழ்க்கை
[தொகு]இவர், நடிகையும், இரட்டை இசையமைப்பாளர்களான ஜதின் மற்றும் லலித் பண்டிட் மற்றும் நடிகை சுலக்சனா பண்டிட் ஆகியோரின் சகோதரியுமான விஜயதா என்பவரை 1990 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனிவேஷ், அவிதேஷ் என இரு மகன்கள் உள்ளனர்.
இறப்பு
[தொகு]5 செப்டம்பர் 2015 அன்று, தனது 51வது பிறந்தநாளுக்கு ஒரு நாள் கழித்து, மும்பையில் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் இறந்தார்.[7] அதே நாளில் மும்பையில் உள்ள ஓசிவாரா மயானத்தில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
சான்றுகள்
[தொகு]- ↑ "Music Composer Aadesh Shrivastava Dies of Cancer". பார்க்கப்பட்ட நாள் 7 September 2015.
- ↑ "Akon in city, lends voice to SRK's Ra.1". http://www.indianexpress.com/news/akon-in-city-lends-voice-to-srks-ra.1/588617/.
- ↑ "Julia Fordham Raises Money for Tsunami-stricken School" இம் மூலத்தில் இருந்து 20 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121020122907/http://www.pastemagazine.com/articles/2005/03/julia-fordham-raises-money-for-tsunamistricken-sch.html.
- ↑ "New CDs". https://www.nytimes.com/2007/12/03/arts/music/03choi.html.
- ↑ "Akon to audition Indian artistes online". http://www.dnaindia.com/mumbai/report_akon-to-audition-indian-artistes-online_1503740.
- ↑ "Aadesh Shrivastava: To Hell & Back". பார்க்கப்பட்ட நாள் 13 September 2015.
- ↑ "Composer Aadesh Shrivastava dies of cancer". The Hindu. 5 September 2015. http://www.thehindu.com/entertainment/composer-aadesh-shrivastava-dies-of-cancer/article7618613.ece.