அழகு (தொலைக்காட்சித் தொடர்)
அழகு | |
---|---|
வகை | குடும்பம் நாடகத் தொடர் |
எழுத்து | விஷன் டைம் டீம் எஸ். மருது ஷங்கர் (உரையாடல்) |
திரைக்கதை | சி.உ முத்துச்செல்வன் |
கதை | சி.உ முத்துச்செல்வன் |
இயக்கம் |
|
படைப்பு இயக்குனர் | வ.முரளி ராமன் |
நடிப்பு | ரேவதி தலைவாசல் விஜய் ஸ்ருதி ராஜ் |
முகப்பு இசை | விஷால் ஆதித்யா (தலைப்பு பாடல்) கிரண் (பின்னணி இசை) |
முகப்பிசை | அழகம்மா எஸ். பி. பாலசுப்பிரமணியம் (பாடியவர்) பத்ரி வெங்கடேஷ் (பாடல்) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 719 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | வைதேகி ராமமூர்த்தி |
ஒளிப்பதிவு | அழகிய மானவையான் ப. செல்ல பாண்டியன் |
தொகுப்பு | எம்.எஸ். தியாகராஜன் ஆர்.பீ.மணிகண்டன் |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | விஷன் டைம் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 20 நவம்பர் 2017 3 ஏப்ரல் 2020 | –
அழகு என்பது சன் தொலைக்காட்சியில் 20 நவம்பர் 2017 முதல் 3 ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்தத் தொடரை விஷன் டைம் என்ற நிறுவனம் தயாரிக்க, ரேவதி, தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ், ஐசுவரியா, காயத்ரி ஜெயராமன், பூவிலங்கு மோகன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[1] இந்தத் தொடர் கொரோனா வைரசு காரணத்தால் 3 ஏப்ரல் 2020 முதல் 719 அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
கதை கரு
[தொகு]இந்த தொடரின் கதை கரு பள்ளி ஆசிரியரான பழனிசுவாமி மற்றும் மனைவி அழகம்மா, இவர்களின் 5 பிள்ளைகளான (ரவி, மகேஷ், ஐஸ்வர்யா, திருநாவுக்கரசு, காவ்யா) ஆகியோரின் வாழ்வில் வரும் பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த கதை நகர்கின்றது.
நடிகர்கள்
[தொகு]பழனிசுவாமி குடும்பம்
[தொகு]- ரேவதி - அழகம்மை பழனிசாமி
- குடும்பத்தின் தலைவர். பழனிசாமியின் மனைவி, எல்லோருக்கும் நன்மையை மட்டும் நினைப்பவர் மற்றும் படிக்காத அறிவாளியும் ஆவார்.
- தலைவாசல் விஜய் - பழனிசாமி
- மனைவி சொல்ல மட்டும் கேட்கும் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார்.
- ஸ்ருதி ராஜ் - சுதா (ரவியின் மனைவி / சுரேந்தரின் முன்னாள் மனைவி)
- வழக்கறிஞ்சர், சகுந்தலா தேவி மற்றும் அரவிந்தின் மூத்த மகள் (என்னும் எவருக்கும் தெரியாது), பூர்ணாவின் சகோதரி மற்றும் அழகம்மையின் முதல் மருமகள். ரவிவின் நண்பரான சுரேந்தரை முதலில் திருமணம் செய்து கொண்டார். அவர் இறக்க தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாகவும் ரவிவை திருமணம் செய்து கொண்டார். கருணை உள்ளம் கொண்டதாள் இவளை சின்ன அழகம்மை என்று அழைப்பார்கள்.
- சங்கீதா - பூர்ணா மகேஷ் (வில்லி)
- சுதாவின் சகோதரி, சகுந்தலா தேவி, அரவிந்தின் இரண்டாவது மகள், அழகம்மையின் இரண்டாவது மருமகள், ரவியுடன் குழந்தைப் பருவத்தில் காதல் கொண்டிருந்தார். ஆனால் சுதாவுடன் ரவி திடீரென திருமணம் செய்து கொண்டதால், மகேஷ் திருமணம் செய்து கொண்டார்.
- காயத்ரி ஜெயராமன் - சகுந்தலா தேவி அரவிந்
- இவர் இந்தியாவின் மிகவும் பிரபலமான வழக்கறிஞர் ஆவார், சுதா, பூர்ணா மற்றும் மதன் ஆகியோரின் தாய். அரவிந்தின் மனைவி.
மற்ற நடிகர்கள்
[தொகு]- மித்ரா → நித்திய தாஸ் → நிரஞ்சனி (அழகம்மாவின் மகள்)
- ஐசுவரியா - வசந்தா (பழனிசுவாமியின் சகோதரி)
- வாசு விக்ரம் - மணிமாறன் (அழகம்மாவின் சகோதரன்)
- பூவிலங்கு மோகன் - சேதுராமன் (கணேஷின் தந்தை)
- பி. கண்ணன் - கண்ணன் (சேதுராமனின் அண்ணன்)
- ராஜ்யலட்சுமி - தேவி (மணிமாறனின் மனைவி)
- ஜெயராம் - கணேஷ் (ஐஸ்வர்யா வின் கணவன் / சேதுராமனின் மூத்த மகன்)
- பாரினா ஆசாத் (1-150) → அக்ஷ்தா போபியா (152-719) - நிவேதிதா
- நவிந்தர் - மகேந்திரா
- மௌனிகா - மனிஷா
- அஸ்வின் - சுரேந்தர்
- ராஜேஷ் - நவீன்
- பாவாஸ் சயனி - வெங்கட்
- ரம்யா ஷங்கர் - ரதி
சிறப்புத் தோற்றம்
[தொகு]நடிகர்களின் தேர்வு
[தொகு]இது ஒரு குடும்ப பின்னையை கொண்ட தொடர். இந்த தொடரின் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகை ரேவதி அழகம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார், இவர் 10 வருடங்களுக்கு பிறகு நடிக்கும் தொலைக்காட்சித் தொடர் இது ஆகும். இவருக்கு ஜோடியாக திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் பழனிசுவாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் கங்கா யமுனா சரஸ்வதி என்ற தொடருக்கு பிறகு நடிக்கும் தொடர் இதுவாகும். தென்றல் தொடர் புகழ் ஸ்ருதி ராஜ் சுதா என்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். காவலன் திரைப்பட நடிகை மித்ரா குரியன் அழகம்மா மற்றும் பழனிசுவாமியின் மகளாக நடித்தார். அத்தியாயம் 243 முதல் இவருக்கு பதிலாக நடிகை நித்ய தாஸ் நடித்தார். இவர்களுடன் பிரபலமான நடிகர்கள் ஐசுவரியா, வாசு விக்ரம், பூவிலங்கு மோகன், லோகேஷ் மற்றும் பி. கண்ணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.
ஒளிபரப்பு நேரம் மாற்றம்
[தொகு]இந்த தொடர் தமிழில் புகழ் பெற்ற வம்சம் தொடருக்கு பதிலாக திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி, அக்டோபர் 22, 2018 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை மாலை 7 மணிக்கு ஒளிபரப்பானது. 5 ஆகத்து 2019 முதல் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி கொரோனாவைரசு காரணத்தால் 3 ஏப்ரல் 2020 முதல் 719 அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
ஒளிபரப்பான திகதி | நாட்கள் | நேரம் | அத்தியாயங்கள் |
---|---|---|---|
20 நவம்பர் 2017 - 20 அக்டோபர் 2018 | 20:30 | 1-282 | |
24 அக்டோபர் 2018 – 3 ஆகத்து 2019 | 19:00 | 283- 520 | |
5 ஆகத்து 2019 – 3 ஏப்ரல் 2020 | 18:30 | 521-719 |
மதிப்பீடுகள்
[தொகு]கீழே உள்ள அட்டவணையில், நீல நிற எண்கள் குறைந்த மதிப்பீடுகள் குறிக்கும் மற்றும் சிவப்பு நிற எண்கள் அதிக மதிப்பீடுகளை குறிக்கும்.
அத்தியாயங்கள் | ஒளிபரப்பான திகதி | BARC மதிப்பீடுகள் (தமிழ்நாடு புதுச்சேரி)[2] | |
---|---|---|---|
தேசிய அளவில் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) | |||
1-50 | 20 நவம்பர் 2017 - 19 ஜனவரி 2018 | 10.8% | |
51-103 | 20 ஜனவரி 2018 - 23 மார்ச் 2018 | 9.4% | |
104-150 | 24 மார்ச் 2018 - 18 மே 2018 | 8.1% | |
151-204 | 19 மே 2018 - 20 ஜூலை 2018 | 8.5% | |
205-250 | 21 ஜூலை 2018 - 13 செப்டம்பர் 2018 | 9.3% | |
251-303 | 14 செப்டம்பர் 2018 - 16 நவம்பர் 2018 | 7.6% | |
304-350 | 17 நவம்பர் 2018 - 11 ஜனவரி 2019 | 7.4% | |
351-400 | 12 ஜனவரி 2019 - 15 மார்ச் 2019 | 8.2% | |
401-450 | 16 மார்ச் 2019 - 14 மே 2019 | 7.6% | |
451-500 | 15 மே 2019 - 11 ஜூலை 2019 | 7.9% | |
501-719 | 8.4% |
சர்வதேச ஒளிபரப்பு
[தொகு]- இந்த தொடரை சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளிலும் ஒளிபரப்பானது.
- இந்த தொடரின் அத்தியாயங்கள் விஷன் டைம் என்ற யூடியூப் அலைவரிசை மற்றும் சன் நெக்ட்ஸ் என்ற இணைய மூலமாகவும் எப்பொழுது பார்க்கமுடியும்.
- இலங்கையில் உள்ள தமிழ் தொலைக்காட்சி சேவையான சக்தி தொலைக்காட்சியில் இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மலை 6:30 மணிக்கு சிங்களம் உபதலைப்புடன் ஒளிபரப்பானது.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி மாலை 6:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | அழகு (5 ஆகத்து 2019 - 3 ஏப்ரல் 2020) |
அடுத்த நிகழ்ச்சி |
தமிழ்ச்செல்வி (3 சூன் 2019 – 3 ஆகத்து 2019) |
ஆதிபராசக்தி (27 ஆகத்து 2020 - 24 அக்டோபர் 2020) |
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 8:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | அழகு (20 நவம்பர் 2017 - 20 அக்டோபர் 2018) |
அடுத்த நிகழ்ச்சி |
வம்சம் (10 சூன் 2013 – 18 நவம்பர் 2017) |
கண்மணி (22 அக்டோபர் 2018 - 28 நவம்பர் 2020) |
- சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் குடும்பத் தொலைக்காட்சி தொடர்கள்
- தமிழ் பழிவாங்குதல் குறித்தான தொலைக்காட்சி தொடர்கள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2017 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2020 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தொலைக்காட்சியில் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம்