அலோர் காஜா மக்களவைத் தொகுதி
அலோர் காஜா (P135) மலேசிய மக்களவைத் தொகுதி மலாக்கா | |
---|---|
Alor Gajah (P135) Federal Constituency in Malacca | |
அலோர் காஜா மக்களவைத் தொகுதி (P135 Alor Gajah) | |
மாவட்டம் | அலோர் காஜா மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 93,311 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | அலோர் காஜா தொகுதி |
முக்கிய நகரங்கள் | அலோர் காஜா, லெண்டு , லுபோக் சீனா, மஸ்ஜித் தானா, கோலா சுங்கை பாரு, பாயா ரும்புட், தாபோ நானிங், ரெம்பியா, புலாவ் செபாங் |
பரப்பளவு | 560 ச.கி.மீ[3] |
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | அட்லி சகாரி (Adly Zahari) |
மக்கள் தொகை | 171,073[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
அலோர் காஜா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Alor Gajah; ஆங்கிலம்: Alor Gajah Federal Constituency; சீனம்: 亚罗牙也国会议席) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தின் அலோர் காஜா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P135) ஆகும்.[5]
அலோர் காஜா மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து அலோர் காஜா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
அலோர் காஜா மாவட்டம்
[தொகு]அலோர் காஜா மாவட்டம் என்பது மலாக்கா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு கிழக்கில் ஜாசின் மாவட்டம்; தெற்கில் மத்திய மலாக்கா மாவட்டம்; ஆகிய இரண்டு மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தின் தலைநகரம் அலோர் காஜா.
அலோர் காஜா என்பது மலாக்கா மாநிலத்தின் மக்களவைத் தொகுதியும் ஆகும். இந்த மாவட்டம் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தம்பின் மாவட்டம்; ரெம்பாவ் மாவட்டம்; மற்றும் போர்டிக்சன் மாவட்டம் ஆகிய மாவட்டங்களுக்கு அருகில் உள்ளது.
அலோர் காஜா மாவட்டம் 31 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.
அலோர் காஜா மக்களவைத் தொகுதி
[தொகு]அலோர் காஜா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் அலோர் காஜா தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P095 | 1974–1978 | அப்துல் காபார் பாபா (Abdul Ghafar Baba) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | அப்துல் ரகீம் தம்பி சிக் (Abdul Rahim Thamby Chik) | ||
6-ஆவது மக்களவை | 1982–1986 | முகமட் அடிப் அடாம் (Mohd Adib Mohamad Adam) | ||
7-ஆவது மக்களவை | P110 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | இபராகிம் சென்டோல் (Ibrahim Jendol) | ||
9-ஆவது மக்களவை | P120 | 1995–1999 | அபு செமான் இயோப் (Abu Seman Yusop) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P135 | 2004–2008¹ | போங் சான் ஓன் ( Fong Chan Onn) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | கோ நய் குவோங் (Koh Nai Kwong) | ||
14-ஆவது மக்களவை | 2018–2020 | முகமட் ரிசுவான் முகமது யூசோப் (Mohd Redzuan Md Yusof) |
பாக்காத்தான் அரப்பான் (பெர்சத்து) | |
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | அட்லி சகாரி (Adly Zahari) |
பாக்காத்தான் அரப்பான் (அமாணா) |
அலோர் காஜா தேர்தல் முடிவுகள்
[தொகு]வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | /– | |
---|---|---|---|---|---|
அட்லி சகாரி (Adly Zahari) | பாக்காத்தான் அரப்பான் | 28,178 | 38.60 | 12.13 ▼ | |
சரில் சுபியான் அம்டான் (Shahril Sufian Hamdan) | பாரிசான் நேசனல் | 27,288 | 37.38 | 1.28 ▼ | |
முகமட் ரிசுவான் முகமட் யூசோப் (Mohd Redzuan Md Yusof) | பெரிக்காத்தான் நேசனல் | 17,211 | 23.58 | 23.58 | |
முகமட் நசுரிக் அப்துல் ரகுமான் (Muhammad Nazriq Abdul Rahman) | தாயக இயக்கம் | 323 | 0.44 | 0.44 | |
மொத்தம் | 73,000 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 73,000 | 98.78 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 900 | 1.22 | |||
மொத்த வாக்குகள் | 73,900 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 93,311 | 79.20 | 4.65 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [8] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூலை 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
- ↑ "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF PAHANG" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.
மேலும் காண்க
[தொகு]- அலோர் காஜா
- லெண்டு
- லுபோக் சீனா
- மஸ்ஜித் தானா
- கோலா சுங்கை பாரு
- பாயா ரும்புட்
- தாபோ நானிங்
- ரெம்பியா
- புலாவ் செபாங்
- மலேசியத் தேர்தல் தொகுதிகள்