அமேதி மக்களவைத் தொகுதி
அமேதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
அமேதி லோக்சபா தொகுதியின் வரைபடம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1967 |
ஒதுக்கீடு | இல்லை |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
அமேதி (Amethi Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவை (இந்திய நாடாளுமன்றத்தின் கீழவை) தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி அமேதி மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியது. இந்தத் தொகுதியானது 1967 இல் உருவாக்கப்பட்டது. இதன் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரசின் வித்யா தர் பாஜ்பாய் தேர்ந்தெடுக்கபட்டார். அவர் 1971 இல் அடுத்த தேர்தலில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். 1977 தேர்தலில், இந்திராகாந்தியின் இளைய மகன் சஞ்சை காந்தி முதல் முறையாக போட்டியிட்டார். அவரை ஜனதா கட்சியின் ரவீந்திர பிரதாப் சிங் தோற்கடித்து வெற்றிபெற்றார். 1980 இல் காங்கிரசின் சஞ்சய் காந்தி முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கபட்டார். அதே ஆண்டின் பிற்பகுதியில், சஞ்சய் காந்தி வானூர்தி விபத்தில் இறந்தார். இதனால் இத்தொகுதிக்கு 1981 இல் இடைத் தேர்தல் நடந்தது. அதில் அவரது சகோதரர் இராஜீவ் காந்தி 84.18 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்யப்படும் வரை இந்த தொகுதியின் உறுப்பினராக இருந்தார்.[1] அதே ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரசின் சதீஷ் சர்மா வெற்றிபெற்றார். 1996 இல் மீண்டும் அவரே தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998 இல் பாரதிய ஜனதா கட்சியின் சஞ்சய சின் காங்கிரசின் சர்மாவை தோற்கடித்தார். ராஜீவ் காந்தியின் மனைவியான, சோனியா காந்தி 1999 முதல் 2004 வரை இந்த தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். அவரது மகன், இராகுல் காந்தி, 2004 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 முதல் இத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நேரு-காந்தி குடும்பத்தின் நான்காவது உறுப்பினராவார். 2019 தேர்தலில் பாஜகவின் இசுமிருதி இரானியால் ராகுல் காந்தி 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்படும்வரை இந்தத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்தார்.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தற்போது அமேதி மக்களவைத் தொகுதியானது ஐந்து சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது அவை: திலோய், சலோன், ஜகதீஷ்பூர், கௌரிகஞ், அமேதி ஆகியவை ஆகும். இந்தத் தொகுதியானது வடக்கில் பாராபங்கி மற்றும் பைசாபாத், மேற்கில் ரேபரேலி, கிழக்கில் சுல்தான்பூர், தெற்கில் பிரதாப்கர் ஆகியவ மக்களவைத் தொகுதிகளால் சூழப்பட்டுள்ளது.[2]
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1967 | வித்யா தார் பாஜ்பாய் | இந்திய தேசிய காங்கிரசு | |
1971 | |||
1977 | ரவீந்திர பிரதாப் சிங் | ஜனதா கட்சி | |
1980 | சஞ்சய் காந்தி | இந்திய தேசிய காங்கிரசு | |
1981^ | ராஜீவ் காந்தி | ||
1984 | |||
1989 | |||
1991 | |||
1991^ | சதீஷ் சர்மா | ||
1996 | |||
1998 | சஞ்சய சின் | பாரதிய ஜனதா கட்சி | |
1999 | சோனியா காந்தி | இந்திய தேசிய காங்கிரசு | |
2004 | ராகுல் காந்தி | ||
2009 | |||
2014 | |||
2019 | ஸ்மிருதி இரானி | பாரதிய ஜனதா கட்சி | |
2024 | கிசோரி லால் சர்மா | இந்திய தேசிய காங்கிரசு |
^இடைத் தேர்தல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1991: Bomb kills India's former leader Rajiv Gandhi". BBC News. பார்க்கப்பட்ட நாள் 29 September 2014.
- ↑ "Assembly constituencies-Post delimitation" (PDF). Chief Electoral Office, Uttar Pradesh. Archived from the original (PDF) on 24 April 2013. பார்க்கப்பட்ட நாள் 6 September 2014.