உள்ளடக்கத்துக்குச் செல்

அமுன்-கெர்-கெபெசெப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமூன்-கெர்-கெபெசெப்
மன்னனின் மகன்
படைகளின் தளபதி
பயனுள்ள நம்பிக்கையாளர்
ராஜாவின் வலது கரம்
அரசை நிர்ணயம் செய்பவர்
அபிடோஸ் கோயிலில் இளவரசர் அமூன்-கெர்-கெபசெப் (மையம்).
துணைவர்இரண்டாம் நெபர்தரி
வாரிசு(கள்)சேத்தி
எகிப்திய மொழி
imn
n
D2 Z1
F23
A51

jmn ḥr ḫpš.f
அரச குலம்எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்
தந்தைஇரண்டாம் ராமேசஸ்
தாய்நெபர்தரி
இறப்புசுமார் 1254 கி.மு
அடக்கம்இரண்டாம் இரமேசசின் மகன்களின் கல்லறை, தெபீசு
சமயம்பண்டைய எகிப்தின் சமயம்

அமுன்-கெர்-கெபெஷெஃப் (Amun-her-khepeshef) (இறப்பு; கி.மு. 1254 பார்வோன் இரண்டாம் ராமேசஸ் மற்றும் ராணி நெபர்தரி ஆகியோரின் முதல் மகனாவார்.

வரலாறு

[தொகு]

இவரது தந்தை இரண்டாம் ரமேசஸ், எகிப்தின் பத்தொன்பதாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் முதலாம் சேத்தியுன் இணை ஆட்சியாளராக இருந்தபோது இவர் பிறந்தார். இவர் முதலில் அமுன்-கெர்-வெனெமெப் (" அமுன் வலது கையுடன் இருக்கிறார்") என்று அழைக்கப்பட்டார். இவர் தனது தந்தையின் ஆட்சியின் ஆரம்பத்தில் தனது பெயரை அமுன்-கெர் -கெபெசெப் ("அமுன் தனது வலிமையான கையுடன்") என்று மாற்றிக் கொண்டார். [1] இரண்டாம் ராமேசஸின் 20 ஆம் ஆட்சியாண்டில் இவர் தனது பெயரை மீண்டும் சேத்-கெர்-கெபெசெப் என்று மாற்றிக்கொண்டதாகத் தெரிகிறது. [1] சேத்-கெர்-கெபெசெப் முன்பு இரண்டாம் ராமேசஸின் மற்றொரு மகனாக கருதப்பட்டார்.

சுயசரிதை

[தொகு]

அமுன்-கெர்-கெபெசெப் , இரண்டாம் ரமேசஸின் முதல் 25 ஆண்டுகளுக்கு எகிப்தின் பட்டத்து இளவரசராக இருந்தார். ஆனால் இவரது தந்தையின் 25 ஆம் ஆண்டு ஆட்சியின்போது இறந்து போனார். [2] இரண்டாம் ரமேசஸின் இரண்டாவது மூத்த மகனான ராமேசஸ் பி, இவருக்குப் பிறகு 25 ஆண்டுகளுக்கு பட்டத்து இளவரசராக இருந்தார் (இந்த பார்வோனின் ஆட்சியின் 25 ஆம் ஆண்டு முதல் 50 ஆம் ஆண்டு வரை). இரண்டாம் ரமேசஸின் 13வது மகன் மெர்நெப்தா புது எகிப்திய இராச்சியதை கிமு 1213 முதல் கிமு 1203 வரை 10 ஆண்டுகள் ஆண்டார்.

அமுன்-கெர்-கெபெசெப்பின் சிலைகளும் சித்தரிப்புகளும் அபு சிம்பெல், அல்-உக்சுர், ராமேசியம் மற்றும் சேத்தியின் அபிடோஸ் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவர் தனது தந்தையின் அபிடோஸ் கோயில் சுவர்களில் ஒரு காளையை சீண்டுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளார்.

இறப்பு

[தொகு]

அமுன்-கெர்-கெபெசெப் தனது தந்தையின் 25 ஆம் ஆட்சியாண்டில் இறந்தார்.[3] இவர் இரண்டாம் நெபர்தரி என்பவரை மணந்தார். இவர் ரமேசஸின் மகளாகவோ, அல்லது ராணி நெபர்தரியின் குழந்தையாகவும் இருக்கலாம், [2] இவர்களுக்கு சேத்தி என்ற மகன் பிறந்தான். அமுன்-கெர்-கெபெசெப் மன்னர்களின் சமவெளியில் உள்ள இரண்டாம் இரமேசசின் மகன்களின் கல்லறையில் இரண்டாம் ராமேசஸின் மகன்களுக்காக கட்டப்பட்ட ஒரு பெரிய கல்லறையில் புதைக்கப்பட்டார். இரண்டாம் ரமேசஸின் 53 ஆம் ஆண்டில் இவரது மறைவு ஆய்வு செய்யப்பட்டது.[1]

கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்களில் அமுன்-கெர்-கெபெசெப்பின் பெயர் பொறிக்கப்பட்ட கேனோபிக் ஜாடிகள் மற்றும் உறுப்புகள் இருந்தன. மேலும் நான்கு ஆண்களின் எலும்புகள், சூழாயுதத்தால் ஏற்பட்ட ஆழமான எலும்பு முறிவு கொண்ட மண்டை ஓடு உட்பட கண்டுபிடிக்கப்பட்டன.[4]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Aidan Dodson & Dyan Hilton, The Complete Royal Families of Ancient Egypt, Thames & Hudson (2004), p.170
  2. 2.0 2.1 Dodson & Hilton, p.173
  3. "Anneke Bart: Ramesses II". Archived from the original on 2008-07-24. பார்க்கப்பட்ட நாள் 2006-11-06.
  4. Boyle, Alan (12 January 2004). "A Pharaoh's firstborn son is resurrected". NBC News. http://www.nbcnews.com/id/6614215/ns/technology_and_science-science/t/pharaohs-firstborn-son-resurrected/#.UlQYPhBELIg. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமுன்-கெர்-கெபெசெப்&oldid=4169622" இலிருந்து மீள்விக்கப்பட்டது