உள்ளடக்கத்துக்குச் செல்

அமாக்சிசிலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமாக்சிசிலின் (Amoxicillin) ஒரு நுண்ணுயிர்க்கொல்லி ஆகும்.[1] பெரும்பாலும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வாய் வழியாகவும் சில நேரங்களில் ஊசி மூலமாகவும் இம்மருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது.[1][2]

வரலாறு

[தொகு]

1958 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு 1972 ஆம் ஆண்டில் இம்மருந்து பயன்பாட்டிற்கு வந்தது.[3][4] உலகச் சுகாதார நிறுவனம் (WHO) இதனை அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்த்துள்ளது.[5] குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் நுண்ணுயிர்க்கொல்லிகளில் இம் மருந்து முக்கியமானது.[6]

மருத்துவப் பயன்

[தொகு]

காதின் நடுப்பகுதி, தொண்டை, தோல், சிறுநீர்க் குழாய் பகுதி ஆகியவற்றில் தொற்று, நிமோனியா, சால்மோனல்லா தொற்று, கிளமிடியா தொற்று, லைம் நோய் போன்றவற்றிற்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது.[1]

பக்க விளைவுகள்

[தொகு]

குமட்டல், வாந்தி, தடுப்பு, வயிற்றுப்போக்கு, தூக்கமின்மை, தலைவலி, குழப்பம், பயம், ஒலி மற்றும் ஒளிக்கு கூசுதல் போன்றவை பக்க விளைவாக ஏற்படலாம்.[1][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Amoxicillin". The American Society of Health-System Pharmacists. Archived from the original on 5 September 2015. பார்க்கப்பட்ட நாள் 1 August 2015.
  2. "Amoxicillin Sodium for Injection". EMC. 10 February 2016. Archived from the original on 27 October 2016. பார்க்கப்பட்ட நாள் 26 October 2016.
  3. Fischer, Janos; Ganellin, C. Robin (2006). Analogue-based Drug Discovery (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 490. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783527607495. Archived from the original on 2017-09-08.
  4. Roy, Jiben (2012). An introduction to pharmaceutical sciences production, chemistry, techniques and technology. Cambridge: Woodhead Pub. p. 239. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781908818041. Archived from the original on 2017-09-08.
  5. "WHO Model List of Essential Medicines (19th List)" (PDF). World Health Organization. April 2015. Archived from the original (PDF) on 13 December 2016. பார்க்கப்பட்ட நாள் 8 December 2016.
  6. Kelly, Deirdre (2008). Diseases of the liver and biliary system in children (3 ed.). Chichester, UK: Wiley-Blackwell. p. 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781444300543. Archived from the original on 2017-09-08.
  7. Gillies, M; Ranakusuma, A; Hoffmann, T; Thorning, S; McGuire, T; Glasziou, P; Del Mar, C (17 November 2014). "Common harms from amoxicillin: a systematic review and meta-analysis of randomized placebo-controlled trials for any indication". CMAJ : Canadian Medical Association Journal 187 (1): E21–31. doi:10.1503/cmaj.140848. பப்மெட்:25404399. 

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமாக்சிசிலின்&oldid=3950328" இலிருந்து மீள்விக்கப்பட்டது