உள்ளடக்கத்துக்குச் செல்

அமர் மகால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமர் மகால்

அமர் மகால் என்பது சம்முவில் உள்ள ஒரு அரண்மனை ஆகும். இது இந்தியாவின் சம்மு காஷ்மீர் இராச்சியத்தில் உள்ளது. இந்த அரண்மனை தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. டோக்ரா மன்னரான மகாராஜா அமர் சிங்கால் நிர்மானிக்கப்பட்ட இந்த அரண்மனை பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு பிரெஞ்சு கட்டிடக் கலைஞரால் பிரெஞ்சு கட்டிடக்கலை வடிவத்தில் கட்டப்பட்டது. இந்த அரண்மனை டோக்ரா வம்சத்தின் கடைசி உத்தியோகபூர்வ இல்லமாகவும், கடைசி அரசர் மகாராஜா ஹரி சிங்கின் இல்லமாகவும் இருந்தது. இந்த அரண்மனையை அருங்காட்சியகமாக பயன்படுத்த கரண் சிங் ஹரி-தாரா அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கினார்.[1] இதில் 120 கிலோ எடையுள்ள தங்க சிம்மாசனம், பஹாரி, காங்க்ரா ஓவியங்கள், 25,000 பழங்கால புத்தகங்களின் நூலகம், பல அரிய கலைத் தொகுப்புகள் மற்றும் அரச குடும்பத்தின் உருவப்படங்களின் பெரிய தொகுப்பு உட்பட பல கண்காட்சிகள் உள்ளன.[1][2]

நிலவியல்

[தொகு]

அமர் மகால் சம்முவில் தாவி ஆற்றின் வலது கரையில், ஆற்றின் வளைவில் அமைந்துள்ளது. தாவி நதி சூர்யபுத்ரி தாவி என்றும் அழைக்கப்படுகிறது (சூரியபுத்ரி அர்த்தம் 'சூரிய கடவுளின் மகள்'). ஒரு காலத்தில் அரச நகரமாக விளங்கிய சம்மு, கோட்டைகள், அரண்மனைகள் மற்றும் கோவில்களுக்கும் பெயர் பெற்றது. ஆற்றின் இடது கரையில், மகாலின் வடக்கே சிவாலிக் மலைகள் அல்லது மலைத்தொடர்கள் உள்ளன. அவற்றின் இடையில் பள்ளத்தாக் பள்ளத்தாக்கில் தாவி நதி பாய்கிறது. இது சம்மு நகரின் மையத்தில், காஷ்மீர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.[1]

வரலாறு

[தொகு]

அமர் மகால் அரண்மனை 1862 இல் ஒரு பிரெஞ்சு கட்டிடக் கலைஞரால் திட்டமிடப்பட்டது. இருப்பினும், இது 1890 கள் வரை கட்டப்படவில்லை. மகாராஜா ஹரி சிங்கின் (ராஜா அமர் சிங்கின் மகன்) மனைவி மகாராணி தாரா தேவி 1967 இல் இறக்கும் வரை இந்த அரண்மனையில்தான் வாழ்ந்தார். அதன்பிறகு, அவரது மகன் கரண் சிங் மற்றும் மனைவி யசோ ராஜ்ய லட்சுமி அரண்மனையை அரிய புத்தகங்கள் மற்றும் கலைப் படைப்புகள் வைக்கும் அருங்காட்சியகமாக மாற்றினர். அவர்கள் அரண்மனை சொத்துக்களை "ஹரி-தாரா அறக்கட்டளை" என்ற அறக்கட்டளைக்கு மாற்றினர். ஜம்முவின் முன்னாள் ஆட்சியாளராக இருந்தபோது, இந்திய அரசால் அவருக்குச் செலுத்தப்பட்ட மன்னர் மானிய நிதியைப் பயன்படுத்தி தனது பெற்றோரின் நினைவாக கரண் சிங் இந்த அருங்காட்சியகத்தை அமைத்தார்.

இந்த அருங்காட்சியகம் 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியால் திறந்து வைக்கப்பட்டது. வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்கள், புத்தக வாசிப்பு, விரிவுரைகள், திரைப்பட நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு வகுப்புகள் மற்றும் பிற பார்வையாளர் நட்பு நடவடிக்கைகளை அருங்காட்சியகத்தில் அறக்கட்டளை ஏற்பாடு செய்கிறது. அறிவார்ந்த பரிமாற்றங்கள், பட்டறைகள் மற்றும் கண்காட்சிகள் ஆகியவை அறக்கட்டளை நடத்தும் வழக்கமான அம்சங்களாகும்.[3][4] அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பஹாரி, காங்க்ரா ஓவியங்கள் ஜம்மு மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள காங்க்ரா கலைப் பள்ளியின் 18 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் உருவாக்கப்பட்டவை.

கட்டிடக்கலை

[தொகு]

செங்கற்களால் கட்டப்பட்ட இந்த அரண்மனை, தாவி ஆற்றின் பள்ளத்தாக்கைக் காணும் ஒரு குன்றின் மீது அழகிய சூழலில் உள்ளது. ஐரோப்பிய கோட்டை பாணியில் கட்டப்பட்ட இந்த அரண்மனை, உயரமான கோபுரங்களுடன் கூடிய சாய்வான கூரைகளைக் கொண்டுள்ளது.[1] ராஜா அமர் சிங் ஆட்சியின் போது கட்டப்பட்ட இது, ஜம்முவில் மிக உயரமான கட்டிடமாக இருந்தது.[5] கட்டிடம் மூன்று பக்கங்களிலும் நீண்ட பாதைகளைக் கொண்டுள்ளது, அவை சாய்வான நெளி தகர கூரைகளால் மூடப்பட்டிருக்கும். அரண்மனை கட்டிடத்தின் முதல் தளத்தில் பிரஞ்சு ஜன்னல்கள் உள்ளன. மேல் தளத்தில் விரிகுடா ஜன்னல் உள்ளது. ஜன்னல்கள் கிரேக்க கட்டிடக்கலை பாணியில் முக்கோண வடிவில் அலங்கரிக்கப்பட்ட நெடுவரிசைகளுக்கு மேல் பொருத்தப்பட்டுள்ளன.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Amar Mahal Palace Museum". National Informatics Centre. Archived from the original on 23 March 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-04-01.
  2. "Amar Mahal Palace Museum". Archived from the original on 5 March 2012. பார்க்கப்பட்ட நாள் 2010-04-01.
  3. "Amar Mahal Museum and Library". Karansingh.com. Archived from the original on 23 December 2009. பார்க்கப்பட்ட நாள் 2010-04-01.
  4. Gandhi, Kishor; Singh, Karan (Sadr-i-Riyasat of Jammu and Kashmir) (1991). The Transition to a global society. Allied Publishers. p. 251. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7023-320-8. பார்க்கப்பட்ட நாள் 2010-04-01.
  5. Jammu Kashmir and Ladakh: tourist-attractions & tourism. Anmol Publications PVT. LTD. பார்க்கப்பட்ட நாள் 2010-04-01.
  6. "Jammu:Amar Mahal Palace". Archived from the original on 10 April 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-04-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்_மகால்&oldid=3903230" இலிருந்து மீள்விக்கப்பட்டது