அன்னா அக்மடோவா இலக்கிய நினைவு அருங்காட்சியகம்
அன்னா அக்மடோவா இலக்கிய நினைவு அருங்காட்சியகம் | |
நிறுவப்பட்டது | 1989 |
---|---|
அமைவிடம் | சென் பீட்டர்சுபெர்கு, உருசியா, நீரூற்று பிரிவு, 34 பாண்டாங்கா ஆற்றங்கறை |
வகை | இலக்கிய அருங்காட்சியகம் |
அன்னா அக்மடோவா இலக்கிய நினைவு அருங்காட்சியகம் (Anna Akhmatova Literary and Memorial Museum) என்பது உருசியாவின் சென் பீட்டர்சுபெர்கு நகரில் உள்ள ஓர் இலக்கிய அருங்காட்சியகமாகும். இது கவிஞர் அன்னா அக்மடோவா நினைவாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[1][2] 1989ஆம் ஆண்டில் அக்மடோவா பிறந்த நூற்றாண்டு அன்று திறக்கப்பட்டது.[3]
அரண்மனை
[தொகு]இந்த அருங்காட்சியகம் போண்டங்கா ஆற்றங்கரையில் உள்ள நீரூற்று இல்லத்தின் தெற்கு பிரிவில் (எண் 53) அமைந்துள்ளது. இந்த நீரூற்று இல்லம் 18ஆம் நூற்றாண்டில் உன்னதமான ஷெரெமெடேவ் குடும்பத்திற்கான அரண்மனையாகக் கட்டப்பட்டது. அதே நேரத்தில் தோட்டத்தில் தெற்கு பிரிவு 1845-இல் சேர்க்கப்பட்டது. இது ஐரோனிம் கோர்சினியால் வடிவமைக்கப்பட்டது.[3]
1935 முதல் 1941 வரை, இது பிரபலமான அறிவியல் அருங்காட்சியகமாக இருந்தது. இது செருமானியப் படையெடுப்பைத் தொடர்ந்து உடனடியாக மூடப்பட்டது. அக்மடோவா தனது இரண்டாவது கணவர் விளாடிமிர் ஷிலேய்கோவுடன் 1918-1920-இல் நீரூற்று இல்லத்தின் வடக்கு தோட்டப் பிரிவிலும், பின்னர் தெற்கில் நிக்கோலாய் புனினுடன் (1920 களின் நடுப்பகுதியிலிருந்து பிப்ரவரி 1952 வரை) வசித்து வந்தார்.[3][4]
இப்போது பிரதான கட்டிடத்தில் தூய பீட்டர்சுபெர்கு இசை அருங்காட்சியகமும் செயல்படுகிறது. மேலும் இதில் ஒரு பிரிவு கவிஞரின் அருங்காட்சியகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகம்
[தொகு]அக்மடோவா அருங்காட்சியகம் தசுதாயெவ்சுகி இலக்கிய மற்றும் நினைவு அருங்காட்சியகத்தின் ஒரு கிளையாக 1989-இல் திறக்கப்பட்டது.[5] 2003ஆம் ஆண்டில், கண்காட்சி நினைவுச்சின்னமாக (அக்மடோவா மற்றும் புனினின் மீட்டமைக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளுடன்) மற்றும் இலக்கியப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு வரை, அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் சுமார் 50,000 பொருட்கள் இருந்தன. இதில் அக்மடோவாவின் படைப்புகள், புகைப்படங்கள் மற்றும் அக்மடோவா மற்றும் அவரது சமகாலத்தவர்களின் கையெழுத்துப் பிரதிகள் இடம் பெற்றன.[3]
ஜோசப் பிராட்சுகியின் அமெரிக்க அலுவலகம்
[தொகு]இந்த அருங்காட்சியகத்தில் "அமெரிக்கன் காபனெட் யோசிஃபா பிராட்ஸ்கோகொ" என்ற ஒரு கண்காட்சி உள்ளது.[6] ஜோசப் பிராட்ஸ்கி விதவையான மரியா சோசானி அருங்காட்சியகத்திற்குப் பரிசளித்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டது. தளபாடங்கள், நூலகம், அஞ்சல் அட்டை சேகரிப்பு போன்றவை, மாசசூசெட்ஸின் சவுத் ஹாட்லியில் உள்ள பிராட்ஸ்கின் கடைசி வீட்டிலிருந்து பெறப்பட்டது.
அக்மடோவாவின் பிற அருங்காட்சியகங்கள்
[தொகு]சென் பீட்டர்சுபெர்கில், கவிஞர், கவிஞரைச் சார்ந்தவர்கள் மற்றும் அவரது காலத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகம் உள்ளது.[7] "அன்னா அக்மடோவா. தி சில்வர் ஏஜ்" என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது அவ்டோவோ அருகே ஒரு சாதாரண அடுக்குமாடி கட்டிடத்தின் தரை தளத்தில் அமைந்துள்ளது.[8]
சிலோபித்கா-செல்லெக்விசாக என்ற சிறிய கிராமத்தில் கமெல்னிட்ஸ்கி மாகாணத்தில் அண்ணா அக்மடோவா இலக்கிய நினைவு அருங்காட்சியகம் உள்ளது.[9]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Anna Akhmatova Museum at The Fountain House பரணிடப்பட்டது ஆகத்து 8, 2010 at the வந்தவழி இயந்திரம், Russian Museums.info பரணிடப்பட்டது செப்டெம்பர் 21, 2010 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Anna Akhmatova Literary and Memorial Museum, St Petersburg Encyclopedia.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Anna Akhmatova Museum at the Fountain House". Petersburg 24. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Шереметевский счет" [Counts on Sheremetev] (in ரஷியன்). Strana.ru. Archived from the original on 2 March 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ The Anna Akhmatova Museum at The Fountain House பரணிடப்பட்டது மார்ச்சு 20, 2011 at the வந்தவழி இயந்திரம், St Petersburg City information.
- ↑ "Американский Кабинет Иосифа Бродского". www.amk-spb.com.
- ↑ "Archived copy". Archived from the original on 2013-03-16. பார்க்கப்பட்ட நாள் 2013-02-05.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "None". பார்க்கப்பட்ட நாள் 23 March 2023.
- ↑ "Анна Ахматова — в українському інтер'єрі". day.kyiv.ua. பார்க்கப்பட்ட நாள் 23 March 2023.
வெளி இணைப்புகள்
[தொகு]- Anna Akhmatova Museum website (in உருசிய மொழி)
- The Anna Akhmatova Museum at The Fountain House (in ஆங்கில மொழி)