அனைத்துலக மாணவர் நாள்
அனைத்துலக மாணவர் நாள் (International Students' Day) என்பது பன்னாட்டு ரீதியில் மாணவர் எழுச்சியை பன்னாட்டு ரீதியில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17 ஆம் நாளன்று இடம்பெறும் நிகழ்வாகும்.[1][2][3]
வரலாறு
[தொகு]1939 ஆம் ஆண்டில் இதே நாளில் செக்கோசிலவாக்கியாவின் தலைநகர் பிராக்கில் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் நாசிப் படைகளினால் நசுக்கப்பட்டமை, போராட்டத்தின் முடிவில் ஜான் ஓப்ளெட்டல் மற்றும் ஒன்பது மாணவர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டமை, செக்கொசிலவாக்கியா ஆக்கிரமிப்புக்குள்ளாமை போன்ற நிகழ்வுகளின் ஞாபகார்த்தமாக இந்நாள் அநுட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நாள் முதன் முதலில் 1941 ஆம் ஆண்டு அனைத்துலக மாணவர் அமைப்பினால் லண்டனில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் அப்போது அகதிகளாக இடம்பெயர்ந்த மாணவர்கள் அங்கத்தவர்களாயிருந்தனர். இந்நிகழ்வை ஐக்கிய நாடுகள் அவை அங்கீகரிக்க ஐரோப்பாவின் தேசிய மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஊடாக இந்த மாணவர் அமைப்பு அழுத்தம் கொடுத்தது.
நவம்பர் 17 நிகழ்வுகள்
[தொகு]- கிரேக்கத்தில் அந்நாட்டு 1967-1974 இராணுவ ஆட்சிக்கெதிராக ஏத்தன்ஸ் பல்தொழில்நுட்ப பயிற்சி நிலைய மாணவர்கள் நடத்திய போராட்டம் 1973 நவம்பர் 17 இல் அதி உச்சக் கட்டத்துக்கு வந்தது. இந்நாளில் போராட்டம் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. இந்நாள் கிரேக்கத்தில் இன்று விடுமுறை நாளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- 1989 இல் இதே நாளில் செக்கோசிலவாக்கியாவில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் கலகம் அடக்கும் காவற்துறையினரால் நசுக்கப்பட்டது. ஆனாலும் இந்நிகழ்வு பின்னர் டிசம்பர் 29 இல் கம்யூனிச அரசைக் கவிழ்க்க ஆரம்ப படியாக அமைந்தது. இந்நாள் தற்போது செக் குடியரசிலும் சிலவாக்கியாவிலும் விடுதலைக்கும் மக்களாட்சிக்குமான போராட்ட நாளாக அரச விடுமுறையாக்கப்பட்டுள்ளன.
வெளி இணைப்புகள்
[தொகு]- அனைத்துலக மாணவர் அமைப்பு கட்டுரை பரணிடப்பட்டது 2005-12-23 at the வந்தவழி இயந்திரம்
- ஐரோப்பிய தேசிய மாணவர் அமைப்பின் கட்டுரை பரணிடப்பட்டது 2005-03-10 at the வந்தவழி இயந்திரம்
- 17 நவம்பர்.. பரணிடப்பட்டது 2007-03-12 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 17 November: International Students’ Day, Study.EU. Retrieved 2017-11-05.
- ↑ "The 17th of November: Remembering Jan Opletal, martyr of an occupied nation", Radio Praha. Retrieved 2017-11-05.
- ↑ "17th of November and its historical meaning", OBESSU. Retrieved 2017-11-05.