உள்ளடக்கத்துக்குச் செல்

அனகாபள்ளி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனகாபள்ளி மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
நிறுவப்பட்ட நாள்4 ஏப்ரல் 2022
தோற்றுவித்தவர்ஆந்திரப் பிரதேச அரசு
தலைமையிடம்அனகபள்ளி
நேர வலயம்ஒசநே 05:30 (இந்திய சீர் நேரம்)
இணையதளம்https://anakapalli.ap.gov.in

அனகாபள்ளி மாவட்டம் (Anakapalli district) ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1][2] இதன் நிர்வாகத் தலைமையிடம் அனகபள்ளி நகரம் ஆகும். இம்மாவட்டம் புதிதாக 4 ஏப்ரல் 2022 அன்று விசாகப்பட்டினம் மாவட்டத்தின் அனகபள்ளி வருவாய் கோட்டம் மற்றும் நரசிப்பட்டினம் வருவாய் கோட்டங்களைக் கொண்டு அனகாபள்ளி மாவட்டம் புதிதாக நிறுவப்பட்டது.[3][4][5][6]

4,292 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அனகப்பள்ளி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 17.270 இலட்சம் ஆகும். இதன் எழுத்தறிவு 62.02% ஆகும்.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

அனகாபள்ளி மாவட்டம் அனகபள்ளி வருவாய் கோட்டம் மற்றும் நரசிப்பட்டினம் வருவாய் கோட்டங்களையும்,[7] 24 மண்டல்களையும், 753 கிராமங்களையும் கொண்டது. இம்மாவட்டம் எலமான்சிலி மற்றும் நரசிப்பட்டினம் எனும் 2 நகராட்சிகளையும், 8 கணக்கெடுப்பில் உள்ள ஊர்களையும் கொண்டது.

அனகாபள்ளி மண்டலம், விசாகப்பட்டினம் மாநகராட்சியின் பெருநகரப் பகுதியில் அமைந்துள்ளது.[8] இம்மாவட்டத்தின் 8 கணக்கெடுப்பில் உள்ள ஊர்கள் பௌலுவாடா, யலமஞ்சிலி, சூடாவரம், நரசிப்பேட்டை, முலகுட்டு, நக்கப்பள்ளி, பெத்த புத்தபள்ளி மற்றும் பாயகராவுபேட்டை ஆகும்.

மண்டல்கள்

[தொகு]

இம்மாவட்டத்தின் இரண்டு வருவாய் கோட்டங்களில் 24 மண்டல்கள் உள்ளது.

# அனகாப்பள்ளி வருவாய் கோட்டம் நரசிப்பட்டினம் வருவாய் கோட்டம்
1 அனகாபள்ளி ரோலுகுண்டா
2 அச்சுதாபுரம் கோலுகொண்டா
3 புத்சாய்யாபேட்டை கோதௌராத்லா
4 சூடாவரம் மகாவரபேலம்
5 தேவரப்பள்ளி நக்கப்பள்ளி
6 கே. கோட்டப்பாடு நாதவரவம்
7 காசிம்கோட்டை நரசிப்பட்டினம்
8 யலமஞ்சிலி பாயகராவுபேட்டை
9 ராம்பில்லி ரவிகாமதாம்
10 முனகபாகா எஸ். ராயவரம்
11 பாரவாதா மடுகுலா
12 சப்பாவரம் சீடிகடா

அரசியல்

[தொகு]

அனகாப்பள்ளி மாவட்டம் அனகாபல்லி மக்களவைத் தொகுதியும், 7 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது. அவைகள்:

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Andhra Pradesh adds 13 new districts
  2. A.P. to have 26 districts from 04 April 2022
  3. Raghavendra, V. (26 January 2022). "With creation of 13 new districts, AP now has 26 districts". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220126110443/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/with-creation-of-13-new-districts-ap-now-has-26-districts/article38327788.ece. 
  4. "ANDHRA PRADESH GAZETTE". G.O.Rt.No.60, Revenue (Lands-IV), 25 [ 1 ] th January, 2022: 117. 25 January 2022. 
  5. "New districts to come into force on April 4". தி இந்து (in ஆங்கிலம்). 30 March 2022. பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.{{cite web}}: CS1 maint: url-status (link)
  6. "కొత్త జిల్లా తాజా స్వరూపం". Eenadu.net (in தெலுங்கு). 31 March 2022. பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.{{cite web}}: CS1 maint: url-status (link)
  7. "GO issued for creation of Anakapalle revenue division". The Hindu (Viskhapatnam). 4 April 2013. http://www.thehindu.com/news/cities/Visakhapatnam/go-issued-for-creation-of-anakapalle-revenue-division/article4580216.ece. 
  8. "Adminsistrative divisions of Visakhapatnam district". Official Website of Visakhapatnam District. National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் 16 January 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனகாபள்ளி_மாவட்டம்&oldid=3741765" இலிருந்து மீள்விக்கப்பட்டது