உள்ளடக்கத்துக்குச் செல்

அண்மைய விண்மீன்களின் கிளீசுப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடிக்கடி கவனத்தில் ஈர்க்கப்படும், பூமியில் இருந்து 25 பாசெக்கு (parsecs) தூரத்தில் காணப்படும் புதிய விண்மீன்களின் பட்டியல் அண்மைய விண்மீன்களின் கிளீசுப் பட்டியல் என அழைக்கப்படுகிறது.

முதற்பதிப்பும் பிற்சேர்க்கையும்

[தொகு]

1957 இல் ஜெர்மனிய நாட்டு வானியல் வல்லுனர் வில்கேல்ம் கிளீசு (21 சூன் 1915 – 12 சூன் 1993) என்பவர் முதலாவது விண்மீன் பட்டியலை வெளியிட்டார், இதில் நம் பூமியிலிருந்து 20 பாசெக்குகள் தூரத்தில் உள்ள ஏறத்தாழ ஆயிரம் விண்மீன்கள் அடங்கிய விபரம் காணப்பட்டது.[1] 1969இல் இந்தத் தொகுப்பு மேலும் விரிவாக்கப்பட்டு விண்மீன்களுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் 22 பாசெக்குகளாக நீட்டப்பட்டது. முதலாவது பட்டியலில் அடங்கும் நட்சத்திரங்கள் இவரது பெயரால் ‘கிளீசு’ என்றும் அதன் சுருக்கப்பெயர்கள் அவரது ஆங்கில முதல் இரண்டு எழுத்துக்களைத் தாங்கி ‘GL’ எனவும் அழைக்கப்பட்டு இந்தப்பெயர்களுக்குப் பின்னர் உரிய இலக்கங்களாக ஒன்றிலிருந்து 915 வரை இடப்பட்டது, இதன் படி விண்மீன்களின் பெயரீடு ‘GLNNN’ ஆக அமைந்தது.[2] மேலும் விரிவாக்கப்பட்ட பதிப்பில் விண்மீன்களது எண்ணிக்கை 1529 வரையில் பட்டியலாக்கப்பட்டது, இதிலிருந்து பெயரீடு ‘GlNNN.NA’ ஆகவும் இதற்குரிய இலக்கங்கள் 1.0 – 965.0 எனும் வகையில் தசம எண்களாகவும் வகுக்கப்பட்டு பட்டியலானது ஏறுவரிசையில் அமைக்கப்பட்டது. 1970இல் இந்தப் பட்டியலுக்குரிய பிற்சேர்க்கை இரிச்சார்ட்டு வான்டர் இரயெட் உவூலி மற்றும் அவரது சகாக்களால் வெளியிடப்பட்டது, இதில் தூரமானது 25 பாசெக்குகளாக நீட்டப்பட்டது.[3]

பின்னைய பதிப்புக்கள்

[தொகு]

கிளீசு தனது பட்டியலின் இரண்டாவது பதிப்பினை 1979இல் ஹார்த்முட் ஜரெய்ப் என்பவருடன் இணைந்து வெளியிட்டார், பெயரீடானது ‘GJ’ (கிளீசு – ஜரெய்ப்) எனப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.[4] மூன்றாவது பதிப்பு 1991இல் மீண்டும் இருவரினதும் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது, இதில் 3803 விண்மீன்களின் விபரங்கள் அடங்கி உள்ளன, இந்தப் பட்டியலே தற்போதும் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய விண்மீன்களின் கிளீசுப் பட்டியல்

[தொகு]
  • கிளீசு 1
  • கிளீசு 16
  • கிளீசு 33
  • கிளீசு 67
  • கிளீசு 65
  • கிளீசு 75
  • கிளீசு 86
  • கிளீசு 105
  • கிளீசு 229
  • கிளீசு 250
  • கிளீசு 436
    • கிளீசு 436 b, கிளீசு 436 விண்மீனை வலம் வரும் புறச்சூரியக் கோள்
    • கிளீசு 436 c, கிளீசு 436 விண்மீனை வலம் வரும் புறச்சூரியக் கோள், பூமியை விட ஐந்து மடங்கு பெரியது
  • கிளீசு 445
  • கிளீசு 541 - Arcturus
  • கிளீசு 542
  • கிளீசு 570
  • கிளீசு 581, செங் குறுமீன் ஒன்று, துலாம் (Libra) உடுக்குவிளில் அமைந்துள்ளது.
    • கிளீசு 581 b, கிளீசு 581 செங் குறு விண்மீனை வலம் வரும் புறச்சூரியக் கோள்
    • கிளீசு 581 c, கிளீசு 581 செங் குறு விண்மீனை வலம் வரும் புறச்சூரியக் கோள்
    • கிளீசு 581 d, கிளீசு 581 செங் குறு விண்மீனை வலம் வரும் புறச்சூரியக் கோள்
    • கிளீசு 581 e, கிளீசு 581 செங் குறு விண்மீனை வலம் வரும் புறச்சூரியக் கோள்
    • கிளீசு 581 g, கிளீசு 581 செங் குறு விண்மீனை வலம் வரும் புறச்சூரியக் கோள்
    • கிளீசு 581 f, கிளீசு 581 செங் குறு விண்மீனை வலம் வரும் புறச்சூரியக் கோள்
  • கிளீசு 623
  • கிளீசு 651
    • கிளீசு 651 b கிளீசு 651 விண்மீனை வலம்வரும் புறச்சூரியக் கோள்
  • கிளீசு 667
  • கிளீசு 673
  • கிளீசு 710, Serpens Cauda உடுக்குவிளில் காணப்படும் விண்மீன்
  • கிளீசு 721 Vega, மிகவும் பிரகாசமான விண்மீன்
  • GJ 725
  • கிளீசு 747AB
  • கிளீசு 777
    • கிளீசு 777 Ab
    • கிளீசு 777 Ac
  • கிளீசு 783
  • கிளீசு 876
    • கிளீசு 876 b
    • கிளீசு 876 c
    • கிளீசு 876 d
    • கிளீசு 876 e
  • கிளீசு 884
  • கிளீசு 892
  • கிளீசு 1214 Ophiuchus உடுக்குவிளில் காணப்படும் விண்மீன்
    • GJ 1214 b, மிகைப் பூமி
  • கிளீசு 3021

உசாத்துணைகள்

[தொகு]
  1. Gliese, W. (1957). Katalog der Sterne näher ALS 20 Parsek für 1950.0 (in German). Astronomisches Rechen-Institut, Heidelberg, 89 Seiten. Bibcode:1957MiABA...8....1G.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. Gliese, W.. "Catalogue of Nearby Stars. Edition 1969". Veröffentlichungen des Astronomischen Rechen-Instituts Heidelberg, Nr. 22, Verlag G. Braun, Karlsruhe, 117 Seiten. Bibcode: 1969VeARI..22....1G. http://www.ari.uni-heidelberg.de/publikationen/vhd/vhd022/fulltext/gif.c001.htm. பார்த்த நாள்: 2017-04-29. 
  3. Woolley, R. V. D. R.; Epps, E. A.; Penston, M. J.; Pocock, S. B. (July 1997). Stars within 25 pc of the Sun (Woolley 1970) (VizieR On-line Data Catalog: V/32A. Originally published in: 1970ROAn....5....1W ed.). SIMBAD. Bibcode:1997yCat.5032....0W.
  4. Gliese, W.; Jahreiß, H. (1979). "Nearby Star Data Published 1969-1978". Astronomy & Astrophysics Supplement Series 38: 423–448. Bibcode: 1979A&AS...38..423G.