அசோக் நகர், சென்னை
அசோக் நகர் | |
---|---|
ஆள்கூறுகள்: 13°02′06″N 80°12′34″E / 13.0351°N 80.2095°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
புறநகர் | சென்னை |
வார்டு | 122 |
அரசு | |
• நிர்வாகம் | தமிழ்நாடு அரசு |
• ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
• முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
• மாவட்ட ஆட்சியர் | மருத்துவர். ஜெ. விஜய ராணி, இ. ஆ. ப |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே 5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600 083 |
வாகனப் பதிவு | TN 09 (சென்னை மேற்கு) |
மக்களவைத் தொகுதி | தென் சென்னை |
சட்டமன்றத் தொகுதி | தியாகராய நகர் |
அசோக் நகர் (ஆங்கிலம்: Ashok Nagar) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது சென்னையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது 1964-இல் நிறுவப்பட்டது. இந்த நகரின் மையத்தில் அசோகர் தூண் உள்ளது.
இந்த புறநகர் பகுதியை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் 1970-களில் நடுத்தர வருமானம் உடையவர்களுக்காக குடியிருப்புகளை கட்டியது. அடுத்த பெரிய உள்கட்டமைப்பாக 1974-ஆம் ஆண்டில், அசோக் தூண் அருகே கட்டப்பட்ட வணிக வளாகமாகும். வங்கிகள், நியாய விலைக் கடை, மளிகைக் கடைகள், நகர்ப்புற மேம்பாட்டு அலுவலகம் ஆகியவை இங்கு செயல்படத் தொடங்கின. அதைத் தொடர்ந்து அண்ணா சமுதாய கூடம் மற்றும் விளையாட்டுக் கூடம் ஆகியவை திறக்கப்பட்டது. 1980களின் முற்பகுதியில், உதயம் திரையரங்க வளாகம் மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை தோன்றின. மேலும் அரசுப் பள்ளிகளும், கூடுதல் போக்குவரத்து வசதிகளும் இந்த காலனியில் வரவுகளைச் சேர்த்தன, இப்போது அசோக் நகர் சிறந்த நிறுவனங்கள், விளம்பரங்கள், வங்கிகள், சொகுசு குடியிருப்புகள், பூங்காக்கள், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொழுதுபோக்கு அரங்குகள் ஆகியவற்றுடன் நன்கு இணைக்கப்பட்ட நகர்ப்புறமாக வளர்ந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]இந்தியாவின், தமிழ்நாடு, சென்னை, மாம்பலத்திற்கு (தி.நகர்) மேற்கே அசோக் நகர் அமைந்துள்ளது. இது, மேற்கில் கே. கே. நகர், வடக்கில் வடபழனி மற்றும் தெற்கே சைதாபேட்டை ஆகிய நகரங்களால் சூழப்பட்டுள்ளது.
போக்குவரத்து
[தொகு]இங்கிருந்து அரசு புறநகர் பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு சென்னைக்கு செல்கின்றன. உதயம் திரையரங்கத்திற்கு எதிரே ஒரு மெட்ரோ நிலையம் உள்ளது. இது சென்னையில் மிக உயரமான மெட்ரோ நிலையம் ஆகும். இது 4 மாடிகளைக் கொண்ட வணிக பொருட்கள் வாங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது.
அசோக் நகருக்கு அருகே உள்ள மாம்பலத்தில், சென்னை புறநகர் தொடருந்து நிலையம் உள்ளது.
கல்வி நிறுவனங்கள்
[தொகு]- அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
- வேளாங்கன்னி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
- காவலர் பயிற்சி கல்லூரி
- ஜவஹர் வித்யாலயா
- டாக்டர் கே. கே. நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி
- வித்யா நிகேதன்
- கேந்திரியா வித்யாலய அசோக் நகர்
- புதுர் உயர்நிலைப்பள்ளி
- ஜிஆர்டி மெட்ரிகுலேசன் பள்ளி
- செயின்ட் ஜான்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி
- லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
- ஜவஹர் மேல்நிலைப்பள்ளி
- ஜே. ஆர். கே மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
- வித்யானிகேதன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
வழிபாட்டுத் தலங்கள்
[தொகு]- அசோக் நகர் அஞ்சநேய பக்தர் சபை
- ஸ்ரீ கருமாரி அம்மன் கோவில்
- ஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயம்
- ஸ்ரீ நவசக்தி காளியம்மன் திருக்கோவில்
- ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவில்
- ஸ்ரீ நாகத்தம்மன் கோவில்
- ஸ்ரீ மல்லிகேஸ்வரர் கோயில்
- ஸ்ரீ ஸ்வர்ணபூரிஸ்வரர் சிவன் கோயில்
- அசோக் நகர் இஸ்லாமிய மசூதி
- சி. எஸ். ஐ சர்ச்
பொழுதுபோக்கு
[தொகு]4 திரைகளைக் கொண்ட உதயம் திரையரங்கம் ஆனது அசோக தூண் சந்திப்பில் உள்ளது. கமலா, ஏ.வி.எம். ராஜேஸ்வரி, எஸ். எஸ். ஆர் பங்கஜம் திரையரங்கள், பலாஸ்ஸோ மற்றும் ஐனாக்ஸ் ஆகியவை வடபழனியில் உள்ளன. உதயத்திலிருந்து 5 நிமிடம் நடந்து ஈக்காட்டுத்தாங்கலில் காசி திரையரங்கம் உள்ளது.
'சங்கமம்' ஆனது சனவரி மாதத்தில் சென்னை முழுவதும் நடத்தப்படும் 10 நாள் இசை மற்றும் நடன விழா ஆகும். அசோக் நகர் நகராட்சி பூங்கா இந்த விழாவை நடத்தும் இடமாகும்.
விளையாட்டு பகுதிகள்
[தொகு]நகராட்சி பூங்கா, அசோக் தூண் சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த பூங்காவில் நடைபயிற்சி மற்றும் குழந்தைகளுக்கு ஒரு சிறிய விளையாட்டு பகுதி உள்ளது. இது தூய்மை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் நன்கு பராமரிக்கப்படுகிறது. பார்வையாளர்கள் தங்கள் வாகனங்களை வெளியே நிறுத்த வேண்டும். பூங்கா நேரம் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.
குழந்தைகள் விளையாடும் பூங்கா, 12 வது அவென்யூவில் உள்ளது. இது 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஒரு சிறிய விளையாட்டுப் பகுதியாகும். பூங்கா நேரம் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை. இந்த பூங்கா 5 இ பார்க் என்றும் அழைக்கப்படுகிறது.
மாந்தோப்பு காலனிக்கு அருகில் அமைந்துள்ள மாந்தோப்பு காலனி துடுப்பாட்ட மைதானத்தில், முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் அணி அதிகாலை மற்றும் வார இறுதி நாட்களில் இணைகிறார்கள். பல குழுக்களால் மாலை நேரங்களில் கால்பந்து விளையாடப்படுகிறது. இந்த மைதானத்தில் வெள்ள விளக்குகள் உள்ளன; அவை தினமும் மாலை நேரங்களில் எரியும். கால்பந்து முதன்மையாக மாலை 5 மணிக்குப் பிறகு விளையாடப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.