உள்ளடக்கத்துக்குச் செல்

அங்குல் எழுத்துமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அங்குல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கொரிய அகரவரிசை, 한글 பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடியின்படி ko அல்லது hangɯ̽l என்று அழைக்கப்படுகிறது. அங்குல் எழுத்துக்கள் தென் கொரியா (ஒலி பெயர்ப்பு முறையில் Hangeul எனப்படுகிறது) மற்றும் 조선글(Chosŏn'gŭl) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடியின்படி-ko|d͡ʑos⁽ʰ⁾ʌngɯ̽l/조선문자 (Chosŏn Muntcha) அல்லது ko|d͡ʑos⁽ʰ⁾ʌnmunt͡sa. கொரியாவின் பகுதியான வட கொரியாவில், இந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இக்கொரிய மொழி 15 ஆம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது.[1] இது 1443ஆம் ஆண்டு ஜோசன் (Joseon) வம்சத்தைச் சேர்ந்த செஜோங் (Sejong) பேரரசரால்   உருவாக்கப்பட்டது. தற்போது தென் கொரியாவிலும், வட கொரியாவிலும், சீனாவின் ஜிலின் மாகாணத்திலும், கொரியாவின், யான்பியன்னிலும் (Yanbian), சாங்பாயிலும் (Changbai) இம்மொழியின் நெடுங்கணக்கு எழுத்து முறை அதிகாரமொழியாகவும், இணை அதிகாரமொழியாகவும் பயன்பட்டு வருகிறது.  தென் கொரியாவில், முதன்மையாக கொரிய மொழிக்கு கங்குல் எழுத்துமுறை பயன்படுத்தப்பட்டது.  1990களின் போது ஹஞ்ஜா மொழியில், சீன எழுத்துக்களின் பயன்பாடு வீழ்ந்தது.

அதன் பாரம்பரிய மற்றும் நவீன வடிவங்களில், 19 மெய்யெழுத்துக்களும் 21 உயிர் எழுத்துக்களும் உள்ளன. இவை லத்தீன் எழுத்துக்கள் போல் தொடர்ச்சியாக எழுதப்படுவதில்லை. அங்குல் எழுத்துக்கள் இணைந்து தொகுதிகளாக்கப்படுகின்றன. உதாரணம்:  

ஹான், இது ஒரு அசை எனப்படுகிறது. 

ஹான் என்ற அசை ஓரெழுத்து போல் தோற்றமளித்தாலும்,

இது   ㅎ h, ㅏa மற்றும் ㄴ n என்ற எழுத்துக்களின் தொகுப்பாகும். 

ஒவ்வொரு அசையும் குறைந்தது இரண்டு முதல் ஆறு எழுத்துக்கள் கொண்ட தொகுதியாக உள்ளன. அவற்றுள் குறைந்தது ஓர் உயிரெழுத்து மற்றும் ஓர் மெய்யெழுத்தாவது இருக்க வேண்டும். பின்னர் இந்தத் தொகுதிகள், கிடைமட்டமாக எழுதப்படும் பொழுது இடமிருந்து வலமாகவும், செங்குத்தாக எழுதப்படும் பொழுது மேலிருந்து கீழாகவும் எழுதப்படும். ஒவ்வொரு கொரிய வார்த்தையும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அசைகள் கொண்டுள்ளது. அதற்கு ஏற்ப தொகுதிகள் எண்ணிக்கை அமையும். இதுவரை 11,172 தொகுதிகளுக்கான தனித்துவ சாத்தியங்கள் அறியப்பட்டுள்ளன.  

கொரிய வார்த்தைகளில் 11,172 சாத்திய அங்குல் அசைகளின் பயன்பாடு உள்ளது. அடிக்கடி பயன்படும் 256 வார்த்தைகளின் வளர் அலைவெண் 88.2%. உயர்மட்ட 512 வார்த்தைகள் 99.9% ஏற்படுகின்றன.[2]

பெயர்கள்

[தொகு]

அதிகாரப் பெயர்கள்

[தொகு]
அங்குல்
Hangul
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்Han(-)geul
McCune–ReischauerHan'gŭl

தென் கொரியா

[தொகு]
  • 1912ல் ஜூ சிக்யோங் (Ju Sigyeong) என்பவர் அங்குல் என்று பெயரிட்டார். 
  • தொன்மையான கொரிய மொழியில் ஹான் (한) என்றால் "பெரிய" என்றும், குல் (글) என்றால் "எழுத்து" என்றும் பொருள். 
  • சீன எழுத்து முறையில் இது   குறிக்கப்படுகிறது.  இந்த எழுத்துமுறை "கொரிய எழுத்துமுறை" என்ற சாத்தியமான விளக்கம் பெற்றுள்ளது.[3] 

வட கொரியா

[தொகு]
  • வட கொரியர்கள் இம்மொழியை "எங்கள் எழுத்துக்கள்" என்று பொருள்படும், சொசொன் Chosŏn Chosŏn'gŭl (조선글 என்று அழைக்கிறார்கள். வட கொரிய பெயர்: Uri kŭlcha (우리 글자 ).[4]

மற்ற பெயர்கள்

[தொகு]

20 ஆம் நூற்றாண்டின், தொடக்கம் வரை அங்குல் என்ற பெயர் உயரடுக்கு மக்களால் கொச்சையானதாகக் கருதப்பட்டது. பாரம்பரிய ஹஞ்ஜா எனப்படும் ஹான் எழுத்து முறை அவர்களால் ஏற்றுக்கொள்ளப்ப்ப்பட்டதாக இருந்தது.[5] 

  • அச்சிம்ஜிஉல் (Achimgeul) (아침글 "எழுதும் நீங்கள், ஒரு காலைக்குள் கற்று கொள்ள முடியும்").[6]  "ஒரு நல்ல மனிதன் ஒரு காலைக்குள் கற்றுக்கொள்ள முடியும்.   முடியும் தெரியப்படுத்த கொண்டு தன்னை அவர்கள் முன் முடிந்துவிட்டது; ஒரு முட்டாள் மனிதன் அறிய முடியும் அவர்கள் இடத்தில் பத்து நாட்கள்."[7] உள்ள ஹஞ்ஜா, இது போன்ற காண்பிக்கப்பட்ட "故智者不終朝而會,愚者可浹旬而學。"[8]
  • Gugmun (கங்குல்: 국문, ஹஞ்ஜா: 國文 "தேசிய ஸ்கிரிப்ட்")
  • Eonmun (கங்குல்: 언문, ஹஞ்ஜா: 諺文 "தாய்மொழிப் ஸ்கிரிப்ட்")
  • Amgeul (암글 "பெண்கள் ஸ்கிரிப்ட்"; மேலும் எழுதப்பட்ட Amkeul 암클). நான் () ஒரு முன்னொட்டு என்று குறிக்கிறது ஒரு பலுக்கல் உள்ளது பெண்மையை
  • Ahaesgeul அல்லது Ahaegeul (아햇글 அல்லது 아해글 "குழந்தைகள் ஸ்கிரிப்ட்")

வரலாறு

[தொகு]
ஒரு பக்கம் இருந்து Hunmin ஜியோங்-eum Eonhae. , கங்குல்-ஒரே பத்தியில், மூன்றாவது இடது இருந்து (나랏말ᄊᆞ미), சுருதி-உச்சரிப்பு, ஒலிப்பு இடது syllable தொகுதிகள்.

அங்குல் எழுத்துமுறையானது, ஜோசோன் (Joseon) வம்சத்தின் நான்காவது அரசனான சீஜோன் (Sejong) மாமன்னரால் அறிவிக்கப்பட்டது. இது அரசர் அறிஞர்களுடனும் செய்த சிறிய திட்டமாக அறியப்படுகிறது. இருப்பினும், சியோஜோ அதைத் தாம் தனியாக உருவாக்கி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.[9]

அங்குல் உருவாக்கப்படுவதற்கு முன்னர், கொரியாவில் வாழ்ந்த ஜோசொன் இன மக்கள் முதன்மையாக மரபுசார் சீன மொழியில் எழுதினார்கள். இடு (idu), ஹையங்சல் (hyangchal), குகீயோல் (gugyeol) மற்றும் கக்பில் (gakpil) ஆகியவற்றுக்கு பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவானது.[10][11][12][13]

பொது மக்களிடையே கல்வியறிவை மேம்படுத்துவதற்காக அங்குல் என்ற தனித்துவமான எழுத்துக்களை ஸேஜிங் மன்னர் உருவாக்கினார்.[14]

சீஜோங்கின் சீரிய நோக்கத்தினால், பிரபலமான கலாச்சாரத்தின் நுழைவாயிலாகவும், குறிப்பாக பெண்களாலும், எழுத்தாளர்களாலும், அங்குல் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.[15]

யோன்சாங்குன், பத்தாவது மன்னர், கல்வியறிவற்றோருக்கு அரசின் தகவல்களை வெளியிடுவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே, 1504 ல் அங்குல் ஆவணங்கள் தடை செய்யப்பட்டன.[16]

ஜுங்க்ஜோங் மன்னரின் (Jungjong), அயன்முன் (Eonmun - 언문청 諺文廳,) அமைச்சகத்தை 1506ல் ஒழித்தார்.[17]

16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அங்குல் எழுத்துமுறை புத்துயிர் பெற்றது. காஸா (gasa) இலக்கியம், சியோ (Sijo) ஆகியவை வளர்ந்துள்ளன. 17 ஆம் நூற்றாண்டில், அங்குல் நாவல்கள் ஒரு பெரிய பாணியாக மாறியது.[18]

1796 இல் ஐசக் டிட்சிங்(Isaac Titsingh) அங்குல் எழுத்துமுறையைப் பயன்படுத்தி எழுதிய முதல் புத்தகம் மேற்கு ஐரோப்பாவில் வெளியிடப்பட்டது. ஹயாஷி ஷீஹீ (Hayashi Shihei) எழுதிய, மூன்று நாடுகளின் ஒரு விளக்கம் எனும் பொருள்படும் சங்கோகு சுரான் ஸுசேட்சு (Sangoku Tsūran Zusetsu) என்ற புத்தகம் அவருடைய சிறிய நூலகத்தில் இடம் பெற்றது.[19] 1785 ஆம் ஆண்டில் ஜப்பானில் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் ஜோசோன் இராச்சியம் பற்றியும், அங்குல் எழுத்துமுறை பற்றியும் விவரித்தது.[20][21]

1832 ஆம் ஆண்டில், கிரேட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்து நாடுகளின் ஒத்துழைப்புடன் கிழக்கத்திய மொழிபெயர்ப்பு நிதியம், டிட்சிங்கின் மறைவுக்குப்பின் அவரது நூல்களை பிரஞ்சு மொழியில் மொழிபெயர்ப்பு செய்தது.[22]

19 ஆம் நூற்றாண்டில், காபோ (Gabo) சீர்திருத்தவாதிகளின் உந்துதலால், மேற்கத்திய சமயப்பரப்பாளர் பள்ளிகளிலும் இலக்கியங்களிலும் அங்குல் ஊக்குவிக்கப்பாட்டது.[23]

1894 ஆம் ஆண்டில் முதன்முறையாக அங்குல் அதிகாரப்பூர்வ மொழியானது. 1895 இல் தொடக்க பள்ளி நூல்களில் அங்குல் மொழி பயன்படுத்தப்பட்டது. மேலும், 1896 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட டோங்னிப் சின்மண் (Dongnip Sinmun), ஹாங்குல் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட முதல் பத்திரிகை ஆகும்.[24]

1938 ஆம் ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் கொரிய மொழி தடை செய்யப்பட்டது.[25]

1941 ஆம் ஆண்டில் கொரிய மொழிப் பிரசுரங்கள் தடை செய்யப்பட்டன.[26]

நடைமுறைப்படுத்தல்

[தொகு]

வட கொரியாவிலும், தென் கொரியாவிலும், 99% எழுத்தறிவை அரசாங்க ஆய்வுகள் உறுதிப்படுத்தின. இருப்பினும், தென் கொரியாவின் பழைய தலைமுறையினரில் 25% பேர் ஹங்குல் மொழியில் எழுத்தறிவு பெற்றிருக்கவில்லை.[27]

பரவலாக்கல்

[தொகு]

சியோலில் உள்ள ஹுன்மிஞியோன்ஜியம் (Hunminjeongeum) சங்கம் ஆசியாவின் எழுத்து வழக்கற்ற மொழிகளுக்கு ஹங்குல் பயன்பாட்டைப் பரப்பியது.[28]

2009 ஆம் ஆண்டில், இந்தோனேசியாவின் சுலாவேசியில்(Sulawesi) உள்ள பா-பாவ் (Bau-Bau) நகரில் அங்குல் அதிகாரப்பூர்வமற்ற மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சியா-சியா (Cia-Cia) மொழி எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டது.[29][30][31]

தென்கொரியாவில் சியோல் நகருக்கு வந்த இந்தோனேசியாவின் சியா-சியா மொழியினர் தென் கொரியா ஊடகத்தின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தனர். சியோலின் மாநகர முதன்மையர் ஓ சே-ஹூன் (Oh Se-hoon) அவர்களை வரவேற்றார்.[32]

இந்தோனேஷியாவில் ஹங்குல் பரப்புவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததாக அக்டோபர் 2012 இல் உறுதி செய்யப்பட்டது.[33]

எழுத்துக்கள்

[தொகு]

இன்றைய காலத்தில் பயன்படுத்தும் அங்குல் எழுத்துமுறையில், 19 மெய்யெழுழுத்துக்களும் (14 தனி-மெய்யெழுத்துக்கள்,  5 இரட்டை-மெய்யெழுத்துக்கள்) மற்றும் 21 உயிரெயெழுத்துக்களும் (6 அடிப்படை உயிரெழுத்துக்கள், 4 "ய்"-கலந்த உயிரெழுத்துக்கள், 5 ஒருங்கிணைந்த உயிரெழுத்துக்கள், 6 "வ்"-கலந்த உயிரெழுத்துக்கள்) உண்டு. இவை போக, அங்குலில் பல்வேறு ஒருங்கிணைந்த இறுதி மெய்யெழுத்துக்களையும், சில பயன்படுத்தப்படாத பண்டைய எழுத்துக்களையும் காணப்படலாம்.

19  மெய்யெழுத்துக்கள்
எழுத்து
தொடக்கம் உட்சரிப்பு க்க ட்ட ள/ர ப்ப ஸ்ஸ (சத்தமில்லை) ஜ்ஜ மச்ம் த்தி சு
ஆங்கில ஒலிபெயர்ப்பு

(ஐ.பி.ஏ)

g

/k/

kk

/k͈/

n

/n/

d

/t/

tt

/t͈/

r/l

/ɾ/

m

/m/

b

/p/

pp

/p͈/

s

/s/

ss

/s͈/

silent j

/tɕ/

jj

/t͈ɕ/

ch

/tɕʰ/

k

/kʰ/

t

/tʰ/

p

/pʰ/

h

/h/

இறுதி உட்சரிப்பு க் ன் த் ள் ம் ப் த் ங் த் த் க் த் ப் த்
ஆல ஒலிபெயர்ப்பு

(ஐ.பி.ஏ)

k

[k̚]

n

/n/

t

[t̚]

l

[ɭ]

m

/m/

p

[p̚]

t

[t̚]

ng

/ŋ/

t

[t̚]

t

[t̚]

k

[k̚]

t

[t̚]

p

[p̚]

t

[t̚]

21 உயிரெழுத்துக்கள்
எழுத்து
உட்சரிப்பு

(எ.கா.)

ப்பா

இ~எ

யெடம்/

டம்1

யானை

யெ

யேன்ன/

ந்த1

2

வனக்ம்

ண்

2

ம்

யெ

டு

3

ண்டு

வி~வெ3

வேலை1

வெ1,3

வெண்

யொ

ன்

2

ன்

வே3

வேல்

2~வி3

விண்

யு

யுவன்

2

அழகு

2~இ

டிவு1

வன்

ஆங்கில ஒலிபெயர்ப்பு a ae ya yae eo e yeo ye o wa wae oe yo u wo we wi yu eu ui/

yi

i
(ஐ.பி.ஏ) /a/ /ɛ/ /ja/ /jɛ/ /ʌ/ /e/ /jʌ/ /je/ /o/ /wa/ /wɛ/ /ø/ ~ [we] /jo/ /u/ /wʌ/ /we/ /y/ ~ [ɥi] /ju/ /ɯ/ /ɰi/ /i

1 - பேச்சு-தமிழ் / கொச்சைத்-தமிழ் உட்சரிப்பு

2 - சொல் இறுதியில் வரும் உயிர்மெய்யெழுத்தின் உயிரெழுத்து உட்சரிப்பு

3 - கொரியா மொழி "வ" உட்சரிப்பு தமிழில் இல்லை. இது ஆங்கில "w" போல் உட்சரிக்க.

நவீன எழுத்து முறையில், பின்வரும் எழுத்துக்கள் மற்றும் எழுத்து தொகுப்புக்கள் காணப்படுகின்றன:

  • 14  மெய்யெழுத்துக்கள்: g, n, d, l/r, m, b, s, சுழி (தொடக்கம்) / ng (இறுதி), j, ch, k, t, p, h
  • 6 உயிரெழுத்துக்கள்: a, eo, o, u, eu, i
  • 4 விளக்க உயிரெழுத்துக்கள் (a y உடன்): ya, yeo, yo, yu

திசை கோட்டுருக்கள்:

  • 5 இரட்டை ("காலம் காட்டும்") மெய்யெழுத்துக்கள்: kk, tt, bb, ss, jj
  • 11 மெய்யெழுத்து தொகுப்புக்கள்: gs, nj, nh, lg, lm, lb, ls, lt, lp, lh, bs
  • 5 (விளக்க) ஓரசையாக ஒலிக்கப்படும் இரண்டு உயிரெழுத்தொலிகள் அல்லது இணையுயிர் எழுத்துக்கள்: ae, yae, e, ye, ui
  • a w உடன் 6 உயிரெழுத்துக்கள் மற்றும் இணையுயிர் எழுத்துக்கள்: wa, wae, oe, wo, we, wi
  • 13 வழக்கொழிந்த மெய்யெழுத்துக்கள்: ᄛ, ㅱ, ㅸ, ᄼ, ᄾ, ㅿ, ㆁ ( எனும் எழுத்திலிருந்து வேறுபட்டது), ᅎ, ᅐ, ᅔ, ᅕ, ㆄ, ㆆ
  • 10 வழக்கொழிந்த இரட்டை மெய்யெழுத்துக்கள்: ㅥ, ᄙ, ㅹ, ᄽ, ᄿ, ᅇ, ᇮ, ᅏ, ᅑ, ㆅ
  • 66 வழக்கொழிந்த தொகுப்பு இரட்டை மெய்யெழுத்துக்கள்: ᇃ, ᄓ, ㅦ, ᄖ, ㅧ, ㅨ, ᇉ, ᄗ, ᇋ, ᄘ, ㅪ, ㅬ, ᇘ, ㅭ, ᇚ, ᇛ, ㅮ, ㅯ, ㅰ, ᇠ, ᇡ, ㅲ, ᄟ, ㅳ, ᇣ, ㅶ, ᄨ, ㅷ, ᄪ, ᇥ, ㅺ, ㅻ, ㅼ, ᄰ, ᄱ, ㅽ, ᄵ, ㅾ, ᄷ, ᄸ, ᄹ, ᄺ, ᄻ, ᅁ, ᅂ, ᅃ, ᅄ, ᅅ, ᅆ, ᅈ, ᅉ, ᅊ, ᅋ, ᇬ, ᇭ, ㆂ, ㆃ, ᇯ, ᅍ, ᅒ, ᅓ, ᅖ, ᇵ, ᇶ, ᇷ, ᇸ
மற்றும் 17 மூன்று மெய்யெழுத்துக்கள் : ᇄ, ㅩ, ᇏ, ᇑ, ᇒ, ㅫ, ᇔ, ᇕ, ᇖ, ᇞ, ㅴ, ㅵ, ᄤ, ᄥ, ᄦ, ᄳ, ᄴ
  • 1 வழக்கொழிந்த உயிரெழுத்துக்கள்: ㆍ ஆரே (arae-a) ('sub-a'; இன்னும் ஜெஜூ (Jeju) மொழியில் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில், இலச்சினைகள் மற்றும் விளம்பரங்களில் ㅏஎழுத்துக்கு ஒரு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • 44 வழக்கொழிந்த இணையுயிர் எழுத்துக்கள் மற்றும் உயிரெழுத்துக்கள் வரிசை முறை: ᆜ, ᆝ, ᆢ, ᅷ, ᅸ, ᅹ, ᅺ, ᅻ, ᅼ, ᅽ, ᅾ, ᅿ, ᆀ, ᆁ, ᆂ, ᆃ, ㆇ, ㆈ, ᆆ, ᆇ, ㆉ, ᆉ, ᆊ, ᆋ, ᆌ, ᆍ, ᆎ, ᆏ, ᆐ, ㆊ, ㆋ, ᆓ, ㆌ, ᆕ, ᆖ, ᆗ, ᆘ, ᆙ, ᆚ, ᆛ, ᆟ, ᆠ, ㆎ
  • சிஎட் (chieut), கீயாக் (kieuk), டையட் (tieut), மற்றும் பையப் (pieup) ஆகியவை பின்வருவனவற்றின் வீரியமிகு வழிப்பொருட்கள், முறையே ஜிஎட் (jieut), கீயோக் (giyeok), டைகியட் (digeut), மற்றும் பையப் (bieup) ஆகும்.
  • வழக்கொழிந்த எழுத்துக்களுடன் ஒரு கூடுதல் கோட்டைச் சேர்ப்பதன் மூலம் இவை உருவாக்கப்பட்டன.
  • இந்த எழுத்துக்கள் தனி எழுத்துகளாகக் கணக்கிடப்படுகின்றன.

அடி தள்ளு கோடு / கீறல்

[தொகு]

அங்குல் எழுத்துக்கள், சில சீன எழுத்து வனப்புடைமை விதிகளை ஏற்றுக்கொண்டன.

எளிய மூச்சுடை காலம்
அடிநாக்கு உயர்ந்து மேலண்ணத்தின் மென்மையான தொண்டைப் பக்கத்தில் தொட்டு எழும்பும் ஒலி
உரசொலி
இடையண்ண ஒலி
குறுக்கு முறை
ஈரிதழ் ஒலி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tale of Hong Gildong". World Digital Library. பார்க்கப்பட்ட நாள் 3 May 2013.
  2. Soobok Lee (2001). "Improving ACE using code point reordering v1.0". {{cite web}}: More than one of |author= and |last= specified (help)
  3. Lee & Ramsey 2000, ப. 13
  4. Young-Key 1997, ப. 2
  5. "5. Different Names for Hangeul". The National Academy of the Korean Language. January 2004. பார்க்கப்பட்ட நாள் 2008-05-19.
  6. Choi Seung-un; Structures et particularités de la langue coréenne பரணிடப்பட்டது 2007-12-02 at the வந்தவழி இயந்திரம்
  7. Hunmin Jeongeum Haerye, postface of Jeong Inji, p. 27a, translation from Gari K. Ledyard, The Korean Language Reform of 1446, p. 258
  8. Korean Wikisource: http://ko.wikisource.org/wiki/훈민정음
  9. "2. The Background of the invention of Hangeul". The National Academy of the Korean Language. January 2004. பார்க்கப்பட்ட நாள் 2008-05-19.
  10. Hannas, Wm C. Asia's Orthographic Dilemma (in ஆங்கிலம்). University of Hawaii Press. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824818920. பார்க்கப்பட்ட நாள் 20 September 2016. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |first1= and |first= specified (help); More than one of |last1= and |last= specified (help)
  11. Chen, Jiangping. Multilingual Access and Services for Digital Collections (in ஆங்கிலம்). ABC-CLIO. p. 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781440839559. பார்க்கப்பட்ட நாள் 20 September 2016. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |first1= and |first= specified (help); More than one of |last1= and |last= specified (help)
  12. (in en) Invest Korea Journal. 23. Korea Trade-Investment Promotion Agency. 1 January 2005. https://books.google.com/books?id=00a2AAAAIAAJ. பார்த்த நாள்: 20 September 2016. "They later devised three different systems for writing Korean with Chinese characters: Hyangchal, Gukyeol and Idu. These systems were similar to those developed later in Japan and were probably used as models by the Japanese.". 
  13. (in en) Korea Now. 29. Korea Herald. 1 July 2000. https://books.google.com/books?id=WAlWAAAAYAAJ&focus=searchwithinvolume&q="The writing systems, called "idu" and "hyangchal," existed several hundred years before Hangul". பார்த்த நாள்: 20 September 2016. 
  14. Koerner, E. F. K.; Asher, R. E. Concise History of the Language Sciences: From the Sumerians to the Cognitivists (in ஆங்கிலம்). Elsevier. p. 54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781483297545. பார்க்கப்பட்ட நாள் 13 October 2016. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |first1= and |first= specified (help); More than one of |last1= and |last= specified (help)
  15. Pratt, Rutt, Hoare, 1999.
  16. "4. The providing process of Hangeul". The National Academy of the Korean Language. January 2004. பார்க்கப்பட்ட நாள் 2008-05-19.
  17. "Jeongeumcheong, synonymous with Eonmuncheong (정음청 正音廳, 동의어: 언문청)" (in Korean). Nate (web portal)/ Encyclopedia of Korean Culture. பார்க்கப்பட்ட நாள் 2008-05-19.정음청 正音廳, 동의어: 언문청)&rft.pub=Nate (web portal)/ Encyclopedia of Korean Culture&rft_id=http://100.empas.com/dicsearch/pentry.html?s=K&i=254353&v=43&rfr_id=info:sid/ta.wikipedia.org:அங்குல் எழுத்துமுறை" class="Z3988">{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  18. "Korea Britannica article" (in கொரியன்). Enc.daum.net. பார்க்கப்பட்ட நாள் 2012-04-13.
  19. WorldCat, Sangoku Tsūran Zusetsu; alternate romaji Sankoku Tsūran Zusetsu
  20. Cullen, Louis M. (2003).
  21. Vos, Ken.
  22. Klaproth, pp. 1-168., p. 1, கூகுள் புத்தகங்களில்
  23. Silva, David J. (2008). "Missionary Contributions toward the Revaluation of Han'geul in Late 19th Century Korea". International Journal of the Sociology of Language 192: 57–74. doi:10.1515/ijsl.2008.035. 
  24. "Korean History". Korea.assembly.go.kr. பார்க்கப்பட்ட நாள் 2012-04-13.
  25. "Hangul 한글". The modern and contemporary history of Hangul (한글의 근·현대사) (in Korean). Daum (web portal) / Britannica. பார்க்கப்பட்ட நாள் 2008-05-19. 1937년 7월 중일전쟁을 도발한 일본은 한민족 말살정책을 노골적으로 드러내, 1938년 4월에는 조선어과 폐지와 조선어 금지 및 일본어 상용을 강요했다.한글의 근·현대사)&rft.atitle=Hangul 한글&rft_id=http://enc.daum.net/dic100/viewContents.do?&m=all&articleID=b24h2804b&rfr_id=info:sid/ta.wikipedia.org:அங்குல் எழுத்துமுறை" class="Z3988">{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  26. "under The Media". Lcweb2.loc.gov. 2011-03-22. பார்க்கப்பட்ட நாள் 2012-04-13.
  27. The Hankyoreh. 어른 25% 한글 못써...정부대책 '까막눈'
  28. "Linguistics Scholar Seeks to Globalize Korean Alphabet". Korea Times. 2008-10-15. https://www.koreatimes.co.kr/www/news/special/2009/07/178_32754.html. 
  29. "Hangeul didn’t become Cia Cia’s official writing". Korea Times. 2010-10-06. https://www.koreatimes.co.kr/www/news/nation/2010/10/113_74114.html. 
  30. Indonesian tribe to use Korean alphabet பரணிடப்பட்டது ஆகத்து 12, 2009 at the வந்தவழி இயந்திரம்
  31. Si-soo, Park (2009-08-06). "Indonesian Tribe Picks Hangeul as Writing System". Korea Times. https://www.koreatimes.co.kr/www/news/nation/2009/08/117_49729.html. 
  32. Kurt Achin (29 January 2010). "Indonesian Tribe Learns to Write with Korean Alphabet". Voice of America இம் மூலத்தில் இருந்து 17 ஜனவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120117004601/http://www.voanews.com/english/news/asia/Indonesian-Tribe-Learns-to-Write-with-Korean-Alphabet-83029477.html. 
  33. "Gov’t to correct textbook on Cia Cia". Korea Times. 2012-10-18. https://www.koreatimes.co.kr/www/news/nation/2012/10/116_122584.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்குல்_எழுத்துமுறை&oldid=3593989" இலிருந்து மீள்விக்கப்பட்டது