அகஸ்தோ பினோசெட்
அகஸ்தோ பினோசெட் | |
---|---|
பினோசெட்டின் அலுவல்முறை உருவப்படம். | |
சிலியின் அரசுத்தலைவர் | |
பதவியில் 17 திசம்பர் 1974 – 11 மார்ச் 1990 | |
முன்னையவர் | சால்வடோர் அயேந்தே |
பின்னவர் | பத்றீசியோ அல்வின் |
சிலி இராணுவ அரசின் தலைவர் | |
பதவியில் 11 செப்டம்பர் 1973 – 11 மார்ச் 1981 | |
முன்னையவர் | புதிய பதவி |
பின்னவர் | ஒசே டோரிபியோ மெரினோ |
சிலி படைத்துறையின் தலைமைத் தளபதி | |
பதவியில் 23 ஆகத்து 1973 – 11 மார்ச் 1998 | |
முன்னையவர் | கார்லோசு பிராட்சு |
பின்னவர் | ரிகார்தோ இசுரீடா |
சிலியின் வாழ்நாள் செனட்டர் | |
பதவியில் 11 மார்ச் 1998 – 4 சூலை 2002 | |
தொகுதி | முன்னாள் தலைவர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அகஸ்தோ ஒசே ரேமன் பினோசெ உகார்த்தெ 25 நவம்பர் 1915 வல்பெய்ரசோவ், சிலி |
இறப்பு | 10 திசம்பர் 2006 (அகவை 91)
சான் டியேகோ (சிலி), சிலி |
தேசியம் | சிலி நாட்டினர் |
துணைவர் | லூசியா இரியார்ட் (1943–2006; அவரது மரணம் வரை) |
பிள்ளைகள் |
|
முன்னாள் கல்லூரி | சிலியின் போர் கழகம் |
வேலை |
|
தொழில் | படைவீரர் |
கையெழுத்து | |
Military service | |
பற்றிணைப்பு | சிலி |
கிளை/சேவை | சிலி படைத்துறை |
சேவை ஆண்டுகள் | 1931–1998 |
தரம் | Captain General |
அலகு |
|
கட்டளை |
|
போர்கள்/யுத்தங்கள் | 1973 சிலி படைத்துறைப் புரட்சி |
அகஸ்தோ ஒசே ரேமன் பினோசெட் உகார்த்தெ (Augusto José Ramón Pinochet Ugarte, எசுப்பானிய ஒலிப்பு: [auˈɣusto pinoˈʃa] அல்லது எசுப்பானிய ஒலிப்பு: [auˈɣusto pinoˈtʃet];[1][2][upper-alpha 1] 25 நவம்பர் 1915 – 10 திசம்பர் 2006), 1973 முதல் 1981 வரை சிலியின் சர்வாதிகாரியாகவும்[3][4] 1973 முதல் 1998 வரை சிலியின் படைத்துறைத் தலைமை தளபதியாகவும் விளங்கியவர். மேலும் சிலி இராணுவ அரசின் தலைவராக 1973 முதல் 1981 வரை இருந்துள்ளார்.[5]
1973ஆம் ஆண்டு அமெரிக்க-ஆதரவுடன் செப்டம்பர் 11 நடந்த சிலி இராணுவப் புரட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சால்வடோர் அயேந்தே தலைமையிலான சமூகவுடைமை குடியரசை வீழ்த்தி சிலியின் ஆட்சியைப் பிடித்தார்; 1925இலிருந்து செயற்பட்டு வந்த மக்களாட்சியும் முடிவுக்கு வந்தது. பல வரலாற்றாளர்கள் இந்த இராணுவப் புரட்சிக்கு ஐக்கிய அமெரிக்கா தந்த ஆதரவே முக்கியத் திருப்பமாக அமைந்ததாகவும் பின்னாளில் அதிகார குவிப்பிற்கும் அமெரிக்க ஆதரவு முதன்மையானதாக இருந்தது என்றும் கருதுகின்றனர்.[6][7][8] முன்னதாக அயேந்தே சிலியின் படைத்துறை தலைமைத் தளபதியாக பினோசெட்டை ஆகத்து 23, 1973இல் நியமித்திருந்தார்.[9] திசம்பர் 1974இல் இராணுவ ஆட்சிக் குழு பினோசெட்டை சிலியின் அரசுத்தலைவராக அறிவித்தது.[10]
1973 முதல் 1990 வரையிலிருந்த இராணுவ ஆட்சியில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.[11] பினோசெட்டின் ஆட்சியின்போது 1,200இலிருந்து 3,200 வரையான நபர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் 80,000 பேர் கட்டாயமாக பாதுகாப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்ததாகவும் 30,000 பேர் மீது மனித உரிமை மீறப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் பிந்தைய விசாரணைகள் கண்டறிந்தன.[12][13][14] 2011 நிலவரப்படி, அலுவல்முறையாக 3,065 பேர் உயிரிழந்ததாகவும் வலுக்கட்டாயமாகக் காணாமற் போயினர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.[15]
"சிகாகோ பாய்சு" என அறியப்பட்ட சிகாகோ பல்கலைக்கழகத்தில் அல்லது அதன் சிலி நாட்டு இணை நிறுவனத்தில் படித்த பொருளியல் நிபுணர்களின் அறிவுரைகளின்படி தாராளமயக் கொள்கைகளையும் கட்டற்ற சந்தைமுறைப் பொருளாதாரத்தையும் இராணுவ ஆட்சி தழுவியது. நாணயமாற்று நிலைப்படுத்துதல், உள்ளூர் தொழில்களுக்குத் தரப்பட்ட கட்டணச் சலுகைகள் விலக்கம், தொழிற்சங்கங்களுக்குத் தடை, சமூக பாதுகாப்பு முறைமையையும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்கல் போன்ற பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் கொள்கைகளால் "சிலியின் அற்புதம்" நிகழ்ந்தது; ஆனால் அரசியல் விமரிசகர்கள் இந்தக் கொள்கைகளால் பொருளாதார ஏற்றத்தாழ்வு கூடியதாகவும் 1982ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு வித்திட்டதாகவும் கூறுகின்றனர்.[16][17] 1990களின் பெரும்பகுதியிலும் தென்னமெரிக்காவின் சிறந்த பொருளாதாரமாக சிலி விளங்கியது. இருப்பினும் பினோசெட்டின் சீர்திருத்தங்கள் இன்றும் விவாதிக்கப்பட்டு வருகின்றது.[18]
பினோசெட்டின் 17-ஆண்டு ஆட்சிக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்கும் வகையில் 1980இல் புதிய அரசியலமைப்பிற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1988இல் நடந்த தேசிய வாக்கெடுப்பில் 56% வாக்காளர்கள் பினோசெட் ஆட்சித் தொடர எதிர்ப்பு தெரிவித்தனர். 1990இல் அரசுத்தலைவர் பதவியிலிருந்து விலகிய பினோசெட் சிலியின் படைத்துறை தலைமைத் தளபதியாக மார்ச் 10, 1998 வரை தொடர்ந்தார். 1998இல் பணி ஓய்வு பெற்று 1980ஆம் ஆண்டு அரசியலமைப்பின்படி வாழ்நாள் செனட்டராகத் தொடர்ந்தார். இருப்பினும் அக்டோபர் 10, 1998இல் இலண்டன் சென்றிருந்த போது மனித உரிமை மீறல் வழக்குகளுக்காக பன்னாட்டு கைதாணையின் கீழ் கைது செய்யப்பட்டார். நீதிமன்றப் போராட்டங்களுக்குப் பிறகு உடல்நலக்கேடு காரணமாக விடுவிக்கப்பட்டு மார்ச் 2000இல் சிலிக்கு திரும்பினார். 2004இல் சிலிநாட்டு நீதிபதி யுவான் குசுமான் டாபியா பினோசெட்டை மருத்துவப்படி நலமுள்ளவராக அறிவித்து வீட்டுக் காவலில் வைத்தார்.[9] 2006ஆம் ஆண்டு திசம்பர் 10இல் மரணமடையும் போது 300 குற்ற வழக்குகள் அவர்மீது நிலுவையில் இருந்தன.[19] ஊழல்களால் குறைந்தது அமெரிக்க$ 28 மில்லியன் சொத்துக் குவித்ததாகவும் வழக்கிருந்தது.[20]
மரணம்
[தொகு]தனது 91ஆம் அகவையில் மாரடைப்பு ஏற்பட்ட ஒரு வாரத்தில் குருதி விம்மு இதயத் திறனிழப்பால் திசம்பர் 10, 2006இல் தலைநகர் சான்டியேகோவில் இயற்கை எய்தினார்.[21] அவரது சமாதி சேதபடுத்தப்படக் கூடும் என்பதால், பினோசெட்டின் விருப்பப்படி, அவரது உடல் எரிக்கப்பட்டது.
பினோசெட்டின் வாழ்க்கை சர்ச்சைக்குரியதாக உள்ளது. சிலர் இவரை பலரைக் கொன்ற கொலைவெறி சர்வாதிகாரியாகவும் மற்ற சிலர் சிலியின் பொருளாதாரத்தை மேம்படுத்திய நற்செயல் சர்வாதிகாரியாகவும் குறிப்பிடுகின்றனர்.
குறிப்புகள்
[தொகு]- ↑ சிலியின் குடிகள்,பினோசெட் உட்பட, இருவிதமாகவும் (பினோசெட் அல்லது பினோசெ) உச்சரித்தனர்.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Augusto Pinochet". Forvo. 27 August 2014. பார்க்கப்பட்ட நாள் 27 August 2014.
- ↑ Daniel Engber (12 December 2006). "Augusto Pino-qué?". slate.com. Salonc.com. பார்க்கப்பட்ட நாள் 8 December 2015.
- ↑ Peter Kornbluh (11 September 2013). The Pinochet File: A Declassified Dossier on Atrocity and Accountability. The New Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1595589120 p. ix
- ↑ Monte Reel and J.Y. Smith (11 December 2006). A Chilean Dictator's Dark Legacy. தி வாசிங்டன் போஸ்ட். Retrieved 20 March 2015.
- ↑ "Bush praises revival of Democracy in Chile". Google news. பார்க்கப்பட்ட நாள் 21 September 2009.
- Smith, James F. (13 March 1990). "80,000 Chileans Cheer Return...". LA Times இம் மூலத்தில் இருந்து 12 ஜனவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120112132737/http://pqasb.pqarchiver.com/latimes/access/60017525.html?dids=60017525:60017525&FMT=ABS&FMTS=ABS:FT&type=current&date=Mar 13, 1990&author=JAMES F. SMITH&pub=Los Angeles Times (pre-1997 Fulltext)&desc=80,000 Chileans Cheer Return of Democracy in `Stadium of Pain'&pqatl=google Los Angeles times: 80,000 Chileans Cheer Return of Democracy in `Stadium of Pain' (March 1990). பார்த்த நாள்: 21 September 2009.
- ↑ Winn, Peter (2010). "Furies of the Andes". A Century of Revolution. Durham, NC: Duke University Press. 239–275. அணுகப்பட்டது 14 January 2014.
- ↑ Peter Kornbluh (11 September 2013). The Pinochet File: A Declassified Dossier on Atrocity and Accountability. The New Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1595589120
- ↑ Lubna Z. Qureshi. Nixon, Kissinger, and Allende: U.S. Involvement in the 1973 Coup in Chile. Lexington Books, 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0739126563
- ↑ 9.0 9.1 "Augusto Pinochet: Timeline". CBS News. 11 December 2006 இம் மூலத்தில் இருந்து 4 January 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070104162648/http://www.cbc.ca/news/background/chile/pinochet.html.
- ↑ Cavallo, Ascanio et al. La Historia Oculta del Régimen Militar, Grijalbo, Santiago, 1997.
- ↑ "Chile under Pinochet – a chronology". The Guardian (London). 24 March 1999. http://www.guardian.co.uk/world/1999/jan/15/pinochet.chile1. பார்த்த நாள்: 10 March 2010.
- ↑ (எசுப்பானியம்) English translation of the Rettig Report
- ↑ 2004 Commission on Torture பரணிடப்பட்டது 2006-05-05 at the வந்தவழி இயந்திரம் (dead link)
- ↑ "Chile to sue over false reports of Pinochet-era missing". Latin American Studies. 30 December 2008. பார்க்கப்பட்ட நாள் 10 March 2010.
- ↑ "Chile recognises 9,800 more victims of Pinochet's rule". BBC News. 18 August 2011. http://www.bbc.co.uk/news/world-latin-america-14584095.
- ↑ Angell, Alan (1991). The Cambridge History of Latin America, Vol. VIII, 1930 to the Present. Ed. Leslie Bethell. Cambridge; New York: Cambridge University Press. p. 318. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-26652-9.
- ↑ Leight, Jessica (3 January 2005). "Chile: No todo es como parece". COHA இம் மூலத்தில் இருந்து 27 நவம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081127214558/http://www.coha.org/NEW_PRESS_RELEASES/New_Press_Releases_2004/04.100 the one in Spanish.htm. பார்த்த நாள்: 5 May 2008.
- ↑ Thomas M. Leonard. Encyclopedia Of The Developing World. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57958-388-1 p. 322
- ↑ Chang, Jack; Yulkowski, Lisa (13 December 2006). "Vocal minority praises Pinochet at his funeral". Bradenton Herald. http://www.accessmylibrary.com/coms2/summary_0286-28896708_ITM. பார்த்த நாள்: 13 April 2009.
- ↑ Larry Rohter, Colonel's Death Gives Clues to Pinochet Arms Deals, த நியூயார்க் டைம்ஸ், 19 June 2006 (ஆங்கிலம்)
- ↑ Muere el ex dictador Chileno Augusto Pinochet EFE
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் அகஸ்தோ பினோசெட் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Extensive bio by Fundación CIDOB பரணிடப்பட்டது 2014-10-06 at the வந்தவழி இயந்திரம் (in Spanish)
- Augusto Pinochet (1915–2006) – A Biography
- France 24 coverage – Augusto Pinochet's Necrology on France 24
- BBC coverage (special report)
- Documentary Film on Chilean Concentration Camp from Pinochet's Regime: Chacabuco பரணிடப்பட்டது 2007-02-12 at the வந்தவழி இயந்திரம்
- CIA Acknowledges Ties to Pinochet’s Repression from The National Security Archive
- Chile under Allende and Pinochet
- Human rights violation under Pinochet
- The Times obituary
- Analysis of economic pol