அகர்வால் மரப்பல்லி
Appearance
அகர்வால் மரப்பல்லி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நெமாசுபிசு
|
இனம்: | நெ. அகர்வாலி
|
இருசொற் பெயரீடு | |
நெமாசுபிசு அகர்வாலி கந்தேகர், 2019 |
அகர்வால் மரப்பல்லி (Agarwal's day gecko)(Cnemaspis agarwali-நெமாசுபிசு அகர்வாலி) என்பது இந்தியாவின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் நெமாசுபிசு பேரினத்தினைச் சார்ந்த சிற்றினம் ஆகும்.[1] பகலாடி வகையினைச் சார்ந்த பாறைகளில் வாழும் இந்த மரப்பல்லி பூச்சிகளை உண்ணும். இது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்திற்கு அருகிலுள்ள சங்ககிரியில் காணப்படும் அகணிய உயிரி. அகர்வால் மரப்பல்லி சிறிய அளவிலான நெமாசுபிசு சிற்றினம் ஆகும். இது 33 மி.மீ க்கும் குறைவான உடல் நீளத்தினை அடையக்கூடியது. இதனுடைய சிற்றினப் பெயரானது இந்திய ஊர்வன ஆராய்ச்சியாளர் இசான் அகர்வாலின் ஊர்வன வகைப்பாட்டியல் பங்களிப்பினை நினைவு கூறும் விதமாக இடப்பட்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zimin, A., Zimin, S. V., Shine, R., Avila, L., Bauer, A., Böhm, M., Brown, R., Barki, G., de Oliveira Caetano, G. H., Castro Herrera, F., Chapple, D. G., Chirio, L., Colli, G. R., Doan, T. M., Glaw, F., Grismer, L. L., Itescu, Y., Kraus, F., LeBreton 2022. A global analysis of viviparity in squamates highlights its prevalence in cold climates. Global Ecology and Biogeography, 00, 1–16
- ↑ KHANDEKAR, AKSHAY 2019. A new species of rock-dwelling Cnemaspis Strauch, 1887 (Squamata: Gekkonidae) from Tamil Nadu, southern India. Zootaxa 4571 (3): 383–397