உள்ளடக்கத்துக்குச் செல்

இரப்பர் முத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவீன லேசர் பொறித்தல் தொழில்நுட்பத்தினுடன், தனிப்பட்ட இரப்பர் முத்திரையை எளிதில் பயன்படுத்தலாம், இவற்றை கடையில் செய்ய சில நிமிடங்களே ஆகும்.
மெக்சிகோவிலுள்ள மியுசியோ டெல் ஆப்ஜெடோ டெல் ஆப்ஜெடோ அருங்காட்சியகத்தின் சேகரிப்பிலிருந்து, 20வது நூற்றாண்டின் இரண்டாம் பாதியிலிருந்த மைத்திண்டு.

இரப்பர் முத்திரை (rubber stamp), குடையப்பட்ட, வார்க்கப்பட்ட, லேசர் பொறிக்கப்பட்ட, வன்பதனப்படுத்தப்பட்ட இரப்பர் தாளின் மீதுள்ள படிமம் அல்லது தோரணத்தின் மீது சாயம் அல்லது நிறமிகளால் உருவாக்கப்பட்ட ஒருவகை மை தடவப்பட்ட கைவினைப்பொருள் ஆகும். இந்த இரப்பர் தாள் நிலையான பொருட்களின்(மரக்கட்டை, அக்ரிலிக் தொகுதி) மீது பொருத்தப்படும். மேலும் வன்பதனப்படுத்தப்பட்ட இரப்பர் படிமம் ஒட்டிக்கொள்ளும் நுரையின் உதவியுடன் ஒட்டிக்கொள்ளும் வினைல் தாளுடன் இணைக்கப்பட்டு, எளிதில் உபயோகப்படுத்தும் வகையில் அக்ரிலிக் கைப்பிடியுடன் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகையான 'ஒட்டிக்கொள்ளும் இரப்பர் முத்திரைகள்' சிறிய அளவிலான இடத்தையே ஆக்கிரமிக்கும், மேலும் மரத்தின் மேல் பொருத்தப்படும் முத்திரைகளை விட விலை மலிவானது. இந்தகைப்பிடியின் மேல் புறத்திலிருந்து ஒளிபுகும் கண்ணாடி சாளரத்தின் கீழே எளிதில் முத்திரையின் நிலையை அறியும் வண்ணம் குறியிடப்பட்டிருக்கும், இதனால் அதிக துல்லியத்துடன் சரியான திசையில் முத்திரையிடலாம். எளிமையான வடிவமைப்பு கொண்ட தற்காலிக முத்திரையை உருளைகிழங்குகளிலும் பொறிக்கலாம். மை பூசப்பட்ட இரப்பர் முத்திரையை எந்த வகையிலான ஊடகத்தின் மீது அழுத்தும்பொழுது, இரப்பர் முத்திரையிலுள்ள படிமம் ஊடகத்தின் மீது பதிகிறது. ஊடகம் பொதுவாக துணி அல்லது காகிதம் போன்ற பொருள்களினால் இருக்கும்.

வணிகரீதியாக கிடைக்கும் இரப்பர் முத்திரைகளை மூன்று வகைப்படுத்தலாம் அவை,

  • 1. அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் முத்திரைகள்
  • 2. பொருட்களை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் முத்திரைகள்
  • 3. குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களாக பயன்படுத்தப்படும் முத்திரகள்

அலுவலகப் பயன்பாட்டு முத்திரைகள்

[தொகு]

அலுவலகத்திற்கான முத்திரைகள் பொதுவாக அலுவலக முகவரியையோ அல்லது லோகோவையோ குறிக்கப் பயன்படுகிறது. அவைகள் பெரும்பாலும் நகரும் பொருட்களால் ஆனது, இதனைப் பயன்படுத்துவோர் முத்திரைகளின் தேதியையோ, வார்த்தைகளையோ மாற்றலாம். இவைகள் உள்வரும் கடிதங்களின் மீது தேதியையோ அல்லது ஆவணங்களின் மீது பக்கஎண், குறிப்புதவிகளையோ குறிக்க உதவுகிறது. சில நாடுகளில் சட்டப்பூர்வமான ஆவணங்களில் கையெழுத்துடன் முத்திரையிடுவது பொதுவான நடைமுறையாகும், இது ஆவணங்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. அலுவலப் பயன்பாடுகளில் மூன்று வகையான இரப்பர் முத்திரைகள் உள்ளன.

  • 1.) பராம்பரிய முத்திரை (Traditional stamp): இதில் மைத்திண்டு தனிகலனில் இருக்கும், முத்திரை தனியே இருக்கும்.
  • 2.) சுயமாக மையிடப்பட்ட முத்திரை (self-inking stamp): இதில் மைத்திண்டின் கீழே இரப்பர் முத்திரை தலைகீழாக ஒட்டி இருக்கும், முத்திரையிடும்பொழுது இரப்பர் முத்திரை 180டிகிரிகோணம் சுண்டப்பட்டு முத்திரையிடுகிறது.
  • 3.) முன்-மையிடப்பட்ட முத்திரை(pre-inked stamp): இதில் நிறைவித்த மை முத்திரை வடிவின் மீதுள்ளது, முத்திரையிடும்பொழுது படிமம் ஊடகத்தின் மீது பதிகிறது.

மேலும் பார்க்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரப்பர்_முத்திரை&oldid=3308388" இலிருந்து மீள்விக்கப்பட்டது