உள்ளடக்கத்துக்குச் செல்

முல்தான் சூரியக் கோயில்

ஆள்கூறுகள்: 30°07′55.9″N 71°26′27.9″E / 30.132194°N 71.441083°E / 30.132194; 71.441083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முல்தான் சூரியக் கோயில்
முல்தான் சூரியக் கோயில் is located in பாக்கித்தான்
முல்தான் சூரியக் கோயில்
முல்தான் சூரியக் கோயில் (பாக்கித்தான்)
முல்தான் சூரியக் கோயில் is located in ஆசியா
முல்தான் சூரியக் கோயில்
முல்தான் சூரியக் கோயில் (ஆசியா)
அமைவிடம்
நாடு:பாக்கித்தான் பாகிஸ்தான்
மாநிலம்:பஞ்சாப்
மாவட்டம்:முல்தான் மாவட்டம்
அமைவு:முல்தான்
ஆள்கூறுகள்:30°07′55.9″N 71°26′27.9″E / 30.132194°N 71.441083°E / 30.132194; 71.441083
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:இந்து கட்டிடக் கலை
சூரிய பகவான்

முல்தான் சூரியக் கோயில் (Sun Temple of Multan), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முல்தான் நகரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோவில் ஆகும். இதன் காலம் பொ.ஊ. 614 அல்லது அதற்கும் முன்னர் ஆகும்.[1][2][3]

வரலாறு

[தொகு]

தொன்ம வரலாறு

[தொகு]

கிருஷ்ணரின் மகன் சாம்பன் தனக்கு பீடித்திருந்த தொழு நோய் நீங்க இக்கோயிலின் சூரிய பகவானை வேண்டியதாக பாகவத புராணம் கூறுகிறது.[4][5][6]

மத்திய கால வரலாறு

[தொகு]

சீன பௌத்த யாத்தீகர் யுவான் சுவாங் பொ.ஊ. 641-ஆம் ஆண்டில் இக்கோயிலுக்கு வருகை புரிந்தது குறித்து தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இச்சூரியக் கோயிலில் சிவன், கௌதம புத்தர் சன்னதிகள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.[7] பாரசீக வரலாற்று அறிஞர் அல்-பிருனி பொ.ஊ. 11-ஆம் நூற்றாண்டில் முல்தான் நகரத்திற்கு வருகை புரிந்த போது இச்சூரியக் கோயிலை பற்றி விவரித்துள்ளார்.

முல்தான் சூரியக் கோவிலை அழித்தல்

[தொகு]

பொ.ஊ. 10-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பஞ்சாப் பகுதியை ஆட்சி செய்த இசுலாமிய ஆட்சியாளர்கள் இச்சூரியக் கோயில வளாகத்தில் மசூதி மற்றும் முல்தான் நகரத்தையும் எழுப்பினர்.[8] 11-ஆம் நூற்றாண்டில் கஜினி முகமது இச்சூரியக் கோயிலை முற்றிலும் சிதைத்து அழித்தான்.[8] இக்கோயில் இசுலாமியர்களால் சிதைக்கப்பட்டதால் இந்துக்கள் இச்சூரியக் கோயிலுக்கு வருகை தருவதை நிறுத்தினர் என அல்-பிருனி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Journal of Indian history: golden jubilee volume. T. K. Ravindran, University of Kerala. Dept. of History. 1973. p. 362.
  2. Avari, Burjor (2013). Islamic Civilization in South Asia: A History of Muslim Power and Presence in the Indian Subcontinent (in ஆங்கிலம்). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-58061-8.
  3. [1] பரணிடப்பட்டது 2016-02-01 at the வந்தவழி இயந்திரம் Survey & Studies for Conservation of Historical Monuments of Multan. Department of Archeology & Museums, Ministry of Culture, Government of Pakistan.
  4. Parampanthi, Swami Bangovinda (1987). Bhagawan Parashuram and evolution of culture in north-east India. p. 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170350330.
  5. Pratāpa, Mahendra; Jafri, Saiyid Zaheer Husain (2008). Region in Indian History By Lucknow University. Dept. of Medieval & Modern Indian History. p. 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788179752050.
  6. Ancient India and Iran: a study of their cultural contacts by Nalinee M. Chapekar, pp 29-30
  7. Pāṇḍeya, Lālatā Prasāda (1971). Sun-worship in ancient India. p. 172.
  8. 8.0 8.1 Flood, Finbarr Barry (2009). Objects of Translation: Material Culture and Medieval "Hindu-Muslim" Encounter. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780691128637.
  9. Wink, Andre (2002). Al-Hind, the Making of the Indo-Islamic World: Early Medieval India and the Expansion of Islam 7Th-11th Centuries. Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780391041738.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்தான்_சூரியக்_கோயில்&oldid=3784567" இலிருந்து மீள்விக்கப்பட்டது